உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க

  • தமிழர் மதம்

117

இவ்வாறு தந் தாய் தந்தையர்பாற் காட்டும் அன்பும் நன்றியும் பணிவுமே, இவ் வுலகத்துள்ள எல்லா வுயிர்க்குந் தாய் தந்தையான முழுமுதற் கடவுளை யறிந்து வழிபட்டு உய்தற்கு வழிகாட்டுவதாகும். எனவே, நம் பிறவிக்குக் கண்கண்ட காரணரான தாய் தந்தையரே, நம் பிறவிக்குக் கண்காணாக் காரணரான முழுமுதற் கடவுளை அறிவிப்ப வராயிருக்கின்றன ரென்பதூஉம், அதனால் நம் தாய் தந்தையரே நம் இம்மை வாழ்க்கையிலிருந்து மறுமை வாழ்க்கைக்கு நாம் செல்ல நடுநின்று உதவி புரிபவரா யிருக்கின்றன ரென்பதூஉந் தெற்றென விளங்கா நிற்கும். அற்றேல், இம்மை வாழ்க்கைக்கு இன்றியமையாத் துணைவராயிருக்குந் தாய் தந்தையர், மறுமை வாழ்க்கைக்கு இன்றியமையாத் துணைவராகக் கருதப்படும் முழுமுதற் கடவுளை அறிவிப்பவராதல் யாங்ஙனமெனின்; அதனைச் சிறிது விளக்குதும்.

முன்னமே கூறியபடி, மக்களாய்ப் பிறந்த நாம் ஐம்புல அறிவுகளுடன் ஆறாம் அறிவாகிய பகுத்துணர்வும் இயற்கை யாகவே வாய்ந்து எதனையும் ஆராய்ந்து பார்க்கும் வேட்கை பெரிதுடையவர்களாய் இருத்தலால், இப்பிறவி நமக்கேன் வந்தது? யார் நமக்கு இப்பிறவியைத் தந்தவர்? நாம் இப் பிறவிக்கு வந்தபின் பசியாலுங் காமத்தாலுந் துன்புறுவதேன்? அத்துன்பம் நீங்குதற்குப் பல்வேறுணவுப் பொருள்களையும் நம் போன்ற மக்களையும் அமைத்து வைத்தவர் யார்? எம்மைப் பிறப்பித்த தாய் தந்தையர் இறந்துபோயது ஏன்? யாமுஞ் சில காலத்தில் இறக்க வேண்டுவதாய் இருப்பது ஏன்? யாம் வேண்டாமலே எம்மைப் பிறப்பித்ததும், யாம் வேண்டினும் விடாமலே எம்மை இறப்பிப்பதும் எது? அவ்வாறு ஆக்கலும் அழித்தலுஞ் செய்வது எதற்கு? பிறப்பதற்குமுன் யாம் எங்கே யிருந்தோம்? எப்படியிருந்தோம் இறந்தபின் எங்கே செல்வோம், எவ்வாறிருப்போம்? இறந்து சென்ற பின் யாம் மீளப் பிறப்பதுண்டா? இல்லையா? பிறப்பதும் இறப்பதுந் தொடர்பாக நிகழுமாயின், அத் துன்ப நிகழ்ச்சியிலிருந்து விடுபட்டுப், பேராப் பேரின்ப வாழ்விலிருப்பது யாங்ஙனம்? எப்போது? என்று பலவாற்றாலெல்லாம் நாம் ஆராய்ச்சி செய்தபடியாகவே யிருக்கின்றோம். ஆராய்ச்சியறிவில் மிகக் குறைந்தவராயிருக்கின்ற கானக மக்களுங்' கூடத் தம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/142&oldid=1592870" இலிருந்து மீள்விக்கப்பட்டது