உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118

  • மறைமலையம் - 31

சான்

முள்ளத்தே மேற்காட்டிய வினாக்கள் எழப்பெற்றவர்களாய்த், தம்மறிவுக்குத் தென்பட்ட வரையில் அவைகளுக்கு விடைகண்டு வாழ்கின்றார்களென்று, அவர்களை இந் நிலவுலகமெங்கணும் போய்க்கண்டு, அவர்களுடைய கொள்கைகளைத் துருவித் துருவி யாராய்ந்த வெள்ளைக் கார ஆசிரியர்கள் பற்பல நூல்களில் வரைந்து வைத் திருக்கின்றார்கள். ஆராய்ச்சி யறிவும் நாகரிகமும் மிகக் குறைந்த கானக மாந்தரே, இம்மை மறுமையைப் பற்றிய உண்மைகளைத் தேர்ந்துணர்தலில் அடங்கா ஆவல் உள்ளவர்களாய் இருக்கின்றனரென்றால், இயற்கை யறிவொடு கல்வியறிவும் நாகரிகமும் வாய்ந்த நாமும் நம் முன்னோர்களும் இம்மை மறுமையைப்பற்றிய உண்மை களை ஆராய்ந்தறியாமல் இருத்தல் இயலுமோ? மின்கள்! இயற்கைப் பொருளாராய்ச்சி யளவில் நின்று அதற்குமேல் ஏதுமே யில்லையென்று அழுத்தமாய்ப் பேசிவந்த ஹக்ஸிலி' என்னும் மேல் நாட்டறிஞர் தாமுந் தம் வாழ் நாளின் கடைப்பகுதியில் இயற்கைப் பொருளின் வேறாக, எல்லாம்வல்ல அறிவுப்பொருள் ஒன்றுண்டென்னும் முடிவுக்கு வந்தார்.2 அவரைப் போலவே இயற்கைப் யற்கைப் பொருளாராய்ச்சியிற் புகழ்பெற்று விளங்கிய டிண்டல்3 என்னும் ஆசிரியரும் அறிவில்லா இயற்கையைத் தவிர வேறேதுமில்லை யென்று உறைப்பாகப் பேசி வந்தனராயினும், பாஸ்டியன்4 என்னும் ஆ சிரியர் செய்த ஆராய்ச்சிகளைத் தாம் மீண்டும் மிக விழிப்பாய்ச் செய்து பார்த்ததிலிருந்து, உயிரில்லா இயற்கைப் பொருளிலிருந்து உயிருடைய அறிவுப் பொருள் தோன்றாது, உயிர்ப்பொருள் உயிரில்லா இயற்பொருளின் வேறாய்ப் பிறிதோர் உயிர்ப் பொருளினின்றே தோன்றும் என்னும் முடிபுக்கு வந்து அவ்வியல்பினை நன்கு விரித்தெழுதி யிருக்கின்றார். இன்னும் இங்ஙனமே இயற்பொருளாராய்ச்சி யில் முனைந்துநின்ற ஆலிவர் லாட்ஜ், உவில்லியம் குரூக்ஸ், உவில்லியம் ஜேம்ஸ், மையர்ஸ், உவில்லியம் மக்டூகல், ஜே.ஏ. தாம்ஸன், பெர்க்ஸன்5 முதலான பேரறிவாளரெல்லாம் ப்போது உயிர்நிலைகளைப் பற்றியுங் கடவுள் உண்மை யைப் பற்றியும் மிக நுண்ணிய ஆராய்ச்சிகள் எல்லும் எல்லியும் இடைவிடாது செய்து, அவைகளை அரும்பெரு நூல்களாக வரைந்து உலகிற்கு உதவியிருக்கின்றார்கள். இன்றும் அவர்தம் அடிச்சுவடு பற்றி இம்மை மறுமை வாழ்க்கையியல்களை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/143&oldid=1592871" இலிருந்து மீள்விக்கப்பட்டது