உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* தமிழர் மதம்

119

நன்காராய்ந்து நூல்கள் எழுதி உதவுவார் தொகை அயல் நாடுகளிற் பெருகிக் கொண்டே வருகின்றது. உண்மையான கல்வி மணம் வீசப்பெறாத இவ்விந்திய நாட்டிலோ, மக்களுயிர்க்கு உறுதிபயக்கும் இவ்விழுமிய துறையிற் புகுந்து ஆராய்வார் கார்த்திகைப் பிறையாய் இருக்கின்றனர். உயர்ந்த கல்வியும் ஆழ்ந்த ஆராய்ச்சியும் இன்றி, அதனால் மறுமையை ஆராயும் அறிவாற்றல் இன்றி, இம்மையை, இயற்கைப் பொருளைத் தவிரப் பிறிதேதுமில்லையென எளிதிற் கரைவார் சிலரே ஆங்காங்குக் காணப்படுகின்றனர்! ஆனாலும், மறுமை வாழ்க்கையைப்பற்றி எண்ணாமல் அவை யெல்லாம் பொய் என எளிதாகப் பேசிவிடுவாருங் கூடச் சிற்சில நேரங்களில் உயிரின் நிலைகளையுங் கடவுளுண்மையினையும் நெஞ்சத் தில் நினையாதிரார் என அறிஞர்கள் தேர்ந்து சொல்லியிருக் கின்றனர். அது கிடக்க,

இனிப், பசி விடாய் காமம் முதலியவற்றால் நமக்கு வருந் துன்பங்களை, நமக்குத் தொடர்புடையவர்கள் நம் பால் வைத்த அன்பின் மிகுதியினாற், பிறபொருட் சேர்க்கையாலும் பிறவுயிர்ச் சேர்க்கையாலுந் தீர்த்து நமக்கு இன்பமும் அறிவும் மேன்மேற் பெருகுமாறு உதவி புரிகின்றன ரென்பதனை முன்னரே விளக்கிக் காட்டினாம். அதனாற், பிறபொருட் சேர்க்கையின்றிப், பிறவுயிர்ச் சேர்க்கையின்றி நமக்குத் துன் நீங்காது, நமக்கு இன்பம் உண்டாகாது, நமக்கு அறிவு வளராது என்னும் உண்மையினை நாம் நன்கு நினைவிற் பதித்துக் ன கொள்ளல் வேண்டும்.

பம்

இனி, நாம் இந்நிலவுலகத்திற் பிறந்தவுடனே நமக்கு வருந் துன்பங்களை நீக்கி நமக்கு இன்பத்தைத் தருபவர் நம் தாய் தந்தையரே யென்பதூஉம் முன்னமே விளக்கப்பட்டது. ஆனாலும், நம் தாய் தந்தையரும் பிறபொருட் சேர்க்கை யின்றிப், பிறவுயிர்ச் சேர்க்கையின்றி நம்முடைய துன்பங் களை நீக்கமாட்டாரா வென்பது ஆராயற்பாற்று, நம் தந்தை அல்லும் பகலும் வெளியே சென்று உழைத்து உணவுப் பண்டங்களைத் தொகுத்துக் கொணர்ந்து தந்தா லன்றோ? நந்தாய் செழுமை யான உடல்நல மனநலம் பெற்றுப், பச்சைப் பசுங் குழவியா யிருந்த நமக்குப், பால் சுரந்தொழுக ஊட்டுவள்? தந்தை யாயினான் பெரிதும் மிடிப்பட்டுக் கூழும் அடகுங் கூடக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/144&oldid=1592872" இலிருந்து மீள்விக்கப்பட்டது