உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழர் மதம்

121

நினைந்து வணங்க வேண்டுவது நமது அன்பான கடமையே யாயினும், அவர்கள் உண்மையிலே தெய்வங்கள் ஆவரா? அவர்கள் நம்மைப் போலவே பசித்தும் விடாய்த் தும் வருந்து கின்றனர்; அவை தீர்க்குஞ் சோறும் நீருந் தேடித் திரிகின்றனர்; நோய்கொண்டு துன்புறுகின்றனர்; சிறிது காலத்தில் மாண்டும் மறைந்து போகின்றனர்!

இனி, நந் தாய் தந்தையர்க்கு உணவுப் பொருள்களை வருவித்துத் தந்தவர்களேனும், அல்லது அவற்றை விளை வித்துத் தந்தவர்களேனுந் தெய்வங்கள் ஆவரா? என்று கருதிப் பார்த்தால்,அவர்களெல்லாரும், நந்தாய் தந்தை யரை யொப்பவே, பசித்தும் விடாய்த்தும் நோயுற்றுஞ் சிறிது காலத்தில் மாய்ந்து மறைந்து போகின்றவர் ளாகவே யிருக்கின்றனர்! இவர் களுடை டைய ய உதவியுந் துணையுங் கூட நிலையில்லாதனவாய் ஒழிகின்றன!

அஃதுண்மையே யாயினும், நம்போன்ற மக்கள் தாம் உயிரோடிருக்குந்தனையுமாவது நமக்குதவியுந் துணையு மாய் இருக்கின்றனரோ வெனின் ; அதுவும் நிலையா யில்லை; அவர்கள் நோயாலும் முதுமையாலும் வருந்தும் போது அவர்கள் நமக்குதவி செய்வது மாறி, நாம் அவர்கட்குதவி செய்யும் நிலையினை அடைகின்றோம். அப்படி யானாலும், அவர்கள் நோயும் முதுமையுமின்றி உரமுடன் உயிர் வாழுங் காறும் அவர்கள் நமக்குதவி செய்யக் காண்கின்றோமே யெனின்; அவர்கள் நன்குயிர் வாழுங் காலத்தும் பெய்ய வேண்டும் பருவத்தில் மழை பெய்யாவிடினும், மழை பெய்தும் பெருவெள்ளத்தாலுஞ் சூறைக் காற்றாலும் நில அதிர்ச்சி யாலும் பயிர் பச்சைகள் முற்ற அழிந்து படினும் அவர்தாம் என் செய்வர்! ஆகவே, நந் தாய் தந்தையர் உண்மையிற் றெய்வங்கள் ஆகாமை போலவே, நந்தாய் தந்தையர்க் குதவியாய் இருந்த வரும் அவர்க்குதவியா யிருந்தவரும் எல்லாம் உண்மையிற் றெய்வங்கள் ஆகாமையுந் தெற்றென விளங்கா நிற்கும்.

என்றாலும், நந்தாய் தந்தையரே நம்மைப் பிறப்பித் தவராகலான், அவர்தாம் நமக்குத் தெய்வங்கள் ஆகற்பால ரெனின்; அவர்தாம் நம்மைப் பிறப்பித்தவரென்பது நமக்கு எங்ஙனந் தெரியும்? நாம் தாய் வயிற்றிற் கருவா யிருந்தகாலத்தும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/146&oldid=1592875" இலிருந்து மீள்விக்கப்பட்டது