உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122

மறைமலையம் - 31

அதனை அறிந்திலேம், தாய் வயிற்றை யகன்று சிறுமகவாய்ப் பிறந்த காலத்தும் அதனை அறிந்திலேம்; வளர்ந்து அறிவதறியுங் காலத்திலேதான் தாய் தந்தையரும் பிறருஞ் சொல்வதைக் கேட்டு நம்பி, “இவர் தாம் என் தாய் தந்தையர்” என்னும் அறிவுவரப் பெறுகின்றோம். எத்தனையோ பேர் தமக்குப் பிள்ளை இல்லாமையாற், பிறருடைய பிள்ளைகளை, அவர் அறியாமலோ அறிந்தோ தம்பாற் கொணர்ந்து தம் வளர்த்து, அப்பிள்ளைகள்

பிள்ளைகளாகவே பெரியவர்களான பின்னும் தாம் பிறர் பெற்ற பிள்ளை களென்பதனை அவர்கள் அறியாமலே வைத்து, அவர்களின் பிறப்பை முற்றுமே மறைத்து விடுகின்றனர். ஆதலால், “நம்மைப் பிறப்பித்த தாய் தந்தையர் இவர்தாம்” என நாம் நம்பும் நம்பிக்கையும் பழுதுபடுதற்கு இடம் இருக்கின்றது. அதனால், நந் தாய் தந்தையரே நம்மைப் பிறப்பித்த தெய்வங்கள் எனக் கருதி விடுவதும் பிழையாகவே யிருக்கின்றது. நாம் நந் தாய் தந்தையராகக் கருதும் மக்களும் அவர்க்கு உறவினரும் அவர்க்கு நண்பரும், அவர்க்கு அயலாரும் ஆகிய அனைவரும் “எங்கிருந்து இங்கு வந்தோம்? எவ்வாறு வந்தோம்?" என்பவைகளை அறியாமலே பிறந்து, சில காலந் துன்புற்றுஞ் சில காலம் இன்புற்றுஞ் சில காலம் இரண்டும் அற்றும் இங்கே பலவகை யால் உழன்று, பிறகு தம்மாலும் பிறராலுந் தடுக்க முடியாமலும், இன்ன விடத்திற்குச் செல்கின்றோம் என்பதனை அறிய முடியாமலும் இறந்துபடுதலை, நங் கண் ணெதிரே காண்கையில், இம் மக்களுள் எவருந் தெய்வம் ஆகாரென்ப தனை நன்கு தெளியப் பெறு கின்றோம் அல்லேமோ? இங்ஙனம் ஆறறிவுடைய மக்களே தெய்வமாகாத போது, மக்களினுந் தாழ்ந்த சிற்றுயிர்களும், உயிரேயில்லாத கல்லும் மண்ணுந் தெய்வமாதல் யாங்ஙனம்? என்னும் இவ்வளவிலே எமது ஆராய்ச்சி யறிவு நின்றுவிடுமோ? இவ்வளவிலே எமதுள்ளம் அமைதி பெற்று நிற்குமோ? என்றால்; இவ்வளவுக்குமேல் அறிய முடியாத நிலையில் மக்களறிவு நின்று விடுதலே நல்லது, என்பர் சிலர். ஆனால், மேன்மேல் ஆராய்ந்து செல்லும் முறையிற் றடைப்படுத்தப் படாமல் வளர்ந்து செல்லும் அறிவே விழுமிய மாந்தரெல்லா ரிடத்துங் காணப்படுதலால், மக்களும்

வி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/147&oldid=1592876" இலிருந்து மீள்விக்கப்பட்டது