உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124

18. கடவுளே தாய் தந்தை

.

இந் நிலவுலகத்துயிர்கள்பாற் காணப்படுந் தாய் தந்தைய ரமைப்பே, நாம் முடிவாய் அறிந்து அமைதி பெறுதற்குரிய உண்மையினைப் புலப்படுத்துவதா யிருக்கின்றது. ஓரறிவுடைய புற் பூண்டுகள் முதல் ஆறறி வுடைய மக்கள் ஈறாகவுள்ள எல்லாவுயிர்களிலும் இத் தாய் தந்தைய ரமைப்பு அமைந்து கிடத்தலை இக்காலத் துயிர் நூல் வல்லார் நன்காராய்ந்து கண்டிருக்கின்றனர். புற் பூண்டுகளிலும் மரஞ் செடி கொடி களிலும் ஆண் பெண் அமைப்பு வழுவாமலே காணப்படு கின்றது. புல்லிலும் ஆண்புல் பெண்புல் உண்டு; ஒவ்வொரு வகைப் பூண்டு களிலும் ஆண்பூண்டு பெண்பூண்டுகள் உண்டு; ஒவ்வொரு வகை மரங்களிலும் ஆண் பெண் மரங்கள் இருக்கின்றன; இங்ஙனமே ஏனைச் செடி கொடிகளிலும் ஆண் செடி கொடிகளும் பெண் செடிகொடிகளும் அமைக்கப் பட்டிருக்கின்றன. ஆண் செடிகொடிகளில் உள்ள கருவைப்

பண் செடிகொடிகளிற் கொண்டுபோய்ச் சேர்க்கும் வண்டுகளின் உதவியாற் பெண் செடிகொடிகள் காயுங் கனியுந் தருகின்றன. இவ்வாறு ஆண் பெண் கருக்கள் ஒன்று சேர்க்கப்படாவிட்டால், மரஞ்செடி கொடிகள் காய்த்துப் பயன் றருவதில்லை. ஆகவே, ஓரறிவுடைய புற்பூண்டுகள் மரஞ் செடி கொடிகளிலும் ஆண் பெண் அல்லது தாய்தந்தைய ரமைப்பு அமைந்து கிடத்தல் ஆராய்ச்சியாற் றுணியப்பட்டிருத்தலின், முதலில் இவ்வுண்மையினை அனைவரும் நன்கு நினைவிற் பதித்துக் கொள்ளல் வேண்டும்.

வ்வமைப்பின் நுட்பம் நம் கண்களுக்குப் புலனாகாத ஓரறிவுடைய புற்பூண்டுகளிலும் மாறாமல் அமைந்து கிடத்தல் போலவே, ஈரறிவு மூவறிவு நாலறிவு வாய்ந்த சிற்றுயிர்களிலும், ஐந்தறிவு வாய்ந்த பாம்பு பறவை ஆடு மாடு அரிமா புலி யானை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/149&oldid=1592879" இலிருந்து மீள்விக்கப்பட்டது