உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழர் மதம்

125

குதிரை முதலான உயிர்களிலுந் தாய் தந்தையராம் ஆண் பெண் அமைப்பு வழுவாமாற் காணப்படுகின்றது. இனி, ஆறறிவு வாய்ந்த நம் மக்களிலும் இத் தாய், தந்தைய ரமைப்பு வழுவாமற் த் தந்தையரமைப்பு காணப்படுதலைப் பற்றி நாம் சொல்ல வேண்டுவதில்லை. இவ்வமைப்பின் பேருதவியினாலேயே உயிர்கள் மேன்மேற் பல்கி வருகின்றன. இவ்வாண் பெண் அமைப்பு இங்குள்ள இவ்வுயிர்கள்பாற் காணப்படாவிட்டால், இந்நிலவுலகில் உயிரற்ற வெறுங்கல்லும் மண்ணுந் தண்ணீருமன்றி உயிர்ப் பொருளென ஒன்று காணப்படுமோ? சொல்லுங்கள்? ஆகவே, இவ் வாண்பெண் அமைப்பே இங்குள்ள உயிர் களெல்லாந் தோன்றுதற்கும், தோன்றிய உயிர்கள் மேன் மேல் அறிவும் முயற்சியும் உடையவாய் இன்புற்று வாழ்தற்கும் பேருதவி புரிகின்றதென்பதனை எல்லாரும் மறவாமல் மனத்திற் பதித்துக்

கொள்ளல் வேண்டும்.

இனி, இவ்வாண் பெண் அமைப்பை, ஓரறிவு முதல் ஐயறிவுவரையில் வாய்ந்த சிற்றுயிர்களும், அவற்றிலும் உயர்ந்த ஆறறிவு வாய்ந்த மக்களுந் தாமாகவே அமைத் துக்கொள்ள வல்லவர்களா? இல்லை, இல்லை. நாம் எங்கிருந்து இங்கு வந்தோம்? எவ்வாறு வந்தோம்? என்பவைகளையே நாம் ரு சிறிதும் அறியாமற் பிறந்து, பிறந்து பின் நெடுங்காலம் ஆக வளர்ந்து பெரியராகியும் இன்னும் அவைதம்மை அறியாத வர்களாகவே, அறிய முடியாதவர்களாகவே யிருக்கின்றனம். இத்தகைய சிற் றறிவுப் பேதைகளாகிய நாம், பிறப்பதற்கு முன்னும், பிறந்த பின்னும், ஆண் பெண், அமைப்புகளை வகுக்கத் தக்க அறிவு வாய்ந்தவர்களாய் இருந்தனமா? இருக்கின்றனமா? சிறிதும் இல்லையே. அல்லது, நம் உடம்பில் உறுப்பேனும் பல உறுப்பேனும் அமைக்கப்படா விட்டாலும், அமைக்கப் பட்டவை பழுதுபட்டுப் போனாலும், அவற்றை நாமே நம் அறிவும் நம் ஆற்றலுங் கொண்டு படைத்து அல்லது திருத்தி அமைத்துக் கொள்ளல் முடியுமா? அணுவளவும் முடியாதே. கண்ணில்லாத குருடர்களையுங், காது கேளாத செவிடர் களையும், வாய் பேசாத ஊமை களையுங், கை காலற்ற முடவர்களையும், இன்னும் இங்ஙனமே உறுப்புகள் ஒன்றும் பலவும் அற்ற அல்லது பழுதுபட்ட மாக்களையும் நாம் நம் மக்கட் பரப்பின் இடை டயிடையே

ஓர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/150&oldid=1592880" இலிருந்து மீள்விக்கப்பட்டது