உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126

மறைமலையம் - 31

காண்கின்றனமே! "எம்மினும் அறிவிற் பெரியார் யார்? எம்மினும் ஆற்றலிற் பெரியார் யார்? யாமே அறிவிற் பெரியேம்! ஏனையோ ரெல்லாம் அறிவற்ற மடையர்” என வாய்கூசாது பேசி இறுமாந்து நடப்பவர் எவரேனுங் குருடர்க்குக் கண்ணுஞ், செவிடர்க்குச் செவியுணர்வும், ஊமையர்க்குப் பேசுந் திறனுங், கைகால் அற்றவர்க்குக் கை காலும் படைத்துக் கொடுக்க மாட்டுவாரா? எட்டுணையும் மாட்டார்களே! இத்தன்மைய ரான நம் மக்கள் தமக்குள்ள சிற்றறிவு கொண்டுந், தமது சிறு வல்லமை கொண்டுங், கடல் மணலை அளவிடினும் அளவிடப் படாத உயிர்த்தொகைகளில் ஆண் பெண் அமைப்புகளை வகுக்க வல்லராதல் யாங்ஙனம்? கூறுமின்கள்!

அற்றன்று, மக்களுடைய அறிவும் ஆற்றலும் இவ்வாண் பண் அமைப்பை வகுக்க ஏலாவிட்டாலும், உயிர்த் தொகைகளின் உடம்பில் ஒருங்கு குழுமி நிற்குஞ் சிற்றணுக்களே, ஆண் பெண் அமைப்புகளாகத் தம்முட் பிரிந்து நின்றன; எனக் கூறுதலாற் போந்த குற்றம் என்னையெனின்; இவ்வாறு கூறுதல், “கொசுகின் கடிக் கஞ்சிப் புலிவாய்ப் பட்டதனை”யே யொத்திருக்கின்றது. ஆறறிவிற் சிறந்த மக்களே இவ்வமைப்பு களை ஒரு தினைத்தனையும் ஆக்க வல்லவர்களாய் இல்லாத போது, அறிவற்ற அணுக்களே பெரிதும் வியக்கத்தக்க இவ் வமைப்புகளை அளவற்ற உயிர்த் தொகைகளிலெல்லாம் இருவேறு வகையாய் வகுத்து வைத்தன வென்றுரைத்தல்,

66

“ஒப்பிலா மலடி பெற்ற மகனொரு முயற்கொம் பேறித் தப்பில் ஆகாயப் பூவைப் பறித்தமை சாற்றி னாரே

என்பதனோடு ஒப்பவைத்து நகையாடற் பாலதாகவே யிருக்கின்றது!

மேலும், உலகத்திலுள்ள

உயிர்களின்

ஒழுக்கங்க ளல்லாம் அறிவினால் நடைபெறுகின்றனவேயல்லாமல், அறி வின்மையால் நடைபெறவில்லை. விழித்திருக்கும் நிலையில் அறிவும், அயர்ந்துறங்கும் நிலையில் அறியாமையும் எல்லா வுயிர்களிடத்தும் முனைத்து நிற்றலை அறியாதார் யார்? உயிர்கள் விழித்து அறிவுடன் உலவும் போது ஒரு செயலைச் செய்கின்றனவா? விழி துயின்று அறிவின்றிக் கிடக்கும்போது அச்செயலைச் செய் கின்றனவா? என்று ஒரு சிறிது கூர்ந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/151&oldid=1592881" இலிருந்து மீள்விக்கப்பட்டது