உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* தமிழர் மதம்

127

பார்ப்பவர்க்கும், அறிவே யில்லாத அணுக்கள் இவ் வாண் பெண் அமைப்பை இவ்வுயிர்கள் பால் அமைத்து வைத்தல் சிறிதும் இயலா தென்பது தெற்றென விளங்கா நிற்கும்.

அங்ஙனமாயின், அறிவே யில்லாத ஒரு காந்தக்கல் இருப்பூசியைத் தன்பால் இழுத்துக் கொள்ளுஞ் செயலைச் செய்தல் என்னையெனின் ; அவ் விழுக்குஞ் செயல் அறிவினால் நிகழுஞ் செயல் அன்று. அறிவானது ஒன்றனை இழுத்தலுஞ் செயவல்லது, இழுத்ததனை விட்டு விடுதலுஞ் செயவல்லது. ஓர் எறும்பானது தனக்கு வேண்டும் ஒரு நொய்யினை இழுத்துச் சல்வதும் பார்மின்கள்! இழுத்துச் சென்றதனைத் தனது வளையிற் கொண்டுபோய் வைத்து விட்டுத் திரும்புதலும் பார்மின்கள்! மேலும், அது செல்லும் வழியில் நாம் ஒரு தடையை ஏற்படுத்தி வைத்தால், அவ்வெறும்பு, அத்தடை ஏறிச் செல்லக் கூடிய அளவின தாய் இருந்தால் அதன் மேல் ஏறி அதனைக் கடந்து செல்லுதலும், அத்தடை அங்ஙனம் ஏறிச் செல்லக்கூடாத அளவினதாய் இருந்தால் அஃது அதனைச் சுற்றி வேறு வழியாய்ச் செல்லுதலும் உற்றுப் பார்மின்கள்!

இங்ஙன மெல்லாம் ஒரு காந்தக் கல் செய்ய வல்ல தாமா? அது தான் இழுத்த ஊசியை இழுத்தபடியே வைத்திருக்கு மல்லது, அதனைத் தானாகவே விட்டுவிடத் தெரியாது. அதுவேயுமன்றி, அக் காந்தக் கல்லுக்கும் அதனால் இழுக்கப் படும் ஓர் ஊசிக்கும் இடையே தடையாக ஒரு பலகையை நிறுத்தினால், அக் காந்தம் அத் தடையினை மேற்கடந்து செல்லல் கூடுமா? அல்லது, அத் தடையினைச் சுற்றிப்போய் வேறொரு வழி செய்து கொண்டு அவ் வூசியினை இழுக்க வல்லதாமா ? ஆகாதே. ஆகவே, அறிவற்ற உயிரில் பொருளின் செயல் ஒன்றனை யிழுத்தலையோ, பிறிதொன்றனைத் தள்ளுதலையோ செய்யுமல்லாமல், இழுத்தல் விடுதல் தடைகடத்தல் பொருள்களைப் பல வகையாய் அமைத்தல் முதலான செயல்களை அறிவுடைய உயிர்கள் செய்தல்போற், செய்யமாட்டாது. ஒரு தூங்கணங் குருவி தான் முட்டையிடும் பருவத்தே தொடுக்கும் கூட்டைப்போல் வியக்கத் தக்கதோர் அமைப்பை அறிவற்ற பொருள் ஏதேனும் செய்யக் கண்ட துண்டா? நல்லிசைப் புலவன் ஒருவன் தன் கூர்த்த அறிவால் க்குஞ் ‘சிலப்பதிகாரம்' போன்ற ஒரு காவியத்தையும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/152&oldid=1592882" இலிருந்து மீள்விக்கப்பட்டது