உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128

மறைமலையம் - 31

இன்னிசைப் புலவன் ஒருவன் தொடுக்கும் ‘யாழ்முறிப் பதிகம்’ போன்ற ஓர் இசைப் பாட்டையும், நாடகப் புலவன் ஒருவன் ஆக்குந் ‘திருச்சிற்றம்பலக் கோவையார்' போன்ற ஒரு நாடக நூலையும், கற்றச் சுவல்லான் ஒருவன் சமைக்கும் 'திருவால வாய்க் கோயில்' போன்ற ஒரு வியத்தகு கட்டிடத்தையும், அறிவின்றிறம் வாய்ந்த கொற்றன் ஒருவன் எழுப்பும் ‘திருமலை நாய்கன் அரண்மனை' போன்ற ஒரு மாபெருங் கட்டிடத்தையும், ஓவியம் வல்லான் ஒருவன் தீட்டுஞ் ‘சகுந்தலை வடிவம்' போன்ற ஓர் ஓவியத்தையும் இன்னும் இக்காலத்தே மேனாட்டறிஞர்கள் அரிதிற் கண்டுபிடித்து இயக்கும் நீராவிவண்டி, நீராவிக்கப்பல், வானவூர்தி, நிலவூர்தி, மின்வண்டி, மின்செய்தி, அச்சுப் பொறி முதலான பயன்படு கருவிகள் போன்ற அமைப்புகளையும் அறிவும் உயிரும் இல்லாத எந்தப் பொருளே பாருளேனும் எந்த அணுவேனும் அமைத்தலை எவரேனும் கண்டதுண்டா? பகர்மின்கள்! இன்னும், உழவு, வாணிகம், அரசியல், சமையல் முதலாக நம் உலக வாழ்க்கையில் நடைபெறும் இன்றியமையாத தொழில்களெல்லாம் அறிவுடைய உயிர்கள் தம் அறிவின் திறத்தால் நடத்தக் காண்கின்றனமே யன்றி, அறிவில்லா உயிரில்லாப் பொருள்கள் நடத்தக் காண்கின்றோம் இல்லையே. நம் உடம்பையும் உயிரையும் நன்கு நிலைபெறச் செய்தற்கு இன்றியமையாததான சமையற்றொழில் எத்துணை யறிவோடு எத்துணைக் கருத்தோடு இயற்றப்பட வேண்டுவதா யிருக்கின்றது! அறிவுங் கருத்துமின்றி ஆக்கப்பட்ட சுவை யில்லா உணவு நமக்கு எவ்வளவு மனப் புழுக்கத்தினைத் தருகின்றது! அங்ஙனம் அவ்வுணவைப் பழுதுபடுத்தியவர்மேல் நமக்கு எவ்வளவு மனக் கசப்பு உண்டாகின்றது! இவ்வாறு நமதுயிர் வாழ்க்கையிற் காணப்படும் ஒவ்வோர் அமைப்புக்கும், ஒவ்வோர் இயக்கத்திற்கும் ஒவ்வொரு செயலுக்கும் நாம் அறிவுடையார் முயற்சியையுந் துணையையும் உதவியையும் நாடியபடி யாயிருந்து வாழ்நாட்கழித்து வருகையில், இவ் வுலகத்துள்ள எண்ணிறந்த கோடியுயிர்களிலுங் காணப்படும் ஆண் பெண் அமைப்புக்கு மட்டும் அறிவற்ற உயிரற்ற அணுக்களை வினை முதலாகக் கூறுவது யாங்ஙனம் பொருந்தும்? ஆகையால், அளவு காண்பரிய இவ்வுயிர்களிற் காணப்படும் இத்தாய் தந்தையரமைப்பிற்கு, அளவற்ற அறிவும் அளவற்ற ஆற்றலும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/153&oldid=1592883" இலிருந்து மீள்விக்கப்பட்டது