உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* தமிழர் மதம்

129

வாய்ந்த ஒரு பேருயிரே வினைமுதலா மென்பது தெள்ளிதின் க்கப்படும் என்க. இவ்வுண்மையைத் தேற்றுதற்கே நம் அறிவுநூற் பேராசிரியராகிய மெய் கண்டதேவர்,

66

“அவன் அவள் அதுவெனும் அவைமூ வினைமையின்

தோற்றிய திதியே ஒடுங்கி மலத்துளதாம்

அந்தம் ஆதி என்மனார் புலவர்”

என்று அருளிச்செய்தார். எல்லா உயிர்ப் பொருள்களிலுங் காணப்படும் அமைப்புகள் அத்தனையும் ஆண்பெண் என்னும் இவ்விருவகை வியத்தகு படைப்பு களில் வந்து அடங்கு தலாலும், நம்மால் அறியப்பட்ட எந்தச் சிற்றுயிரேனும் அல்லது எந்த மக்களேனும் இவ்விருவேறு வகையான படைப்பை உண்டாக்க வல்லவர்களாய் இல்லாமையாலும், இவ்வரிய பெரிய நுண்ணிய அமைப்பை வகுத்து, அவ்வாற்றால், தந் நிலையில் அறிவு விளங்குவதின்றி இருளிற் கிடந்து துன்புற்று உயிர்களுக்கு அறிவைச் சிறிது சிறிதாகப் படிப்படியா விளங்கச் செய்து, இன்பத்தை ஊட்டிவரும் பேரறிவுப் பேராற்றற் பேரருட் பேருயிர் ஒன்றுண்டென்பது தெளிய ப்படும். வ்வருட் பேருயிரே முழுமுதற்கடவுளாகுமென்று தொன்று தாட்டு நந் தமிழ் முன்னோருந் தமிழாசிரியருங் கருதி அதனையே வழிபட்டு வரலாயினர். முழுமுதற் கடவுள் ஒருவர் உண்டென்பதனைத் துணிதற்கு உயிர்களிற் காணப்படும் இவ்வாண் பெண் அமைப்பு நேர்வழி காட்டுதல் போல உயிரற்ற பொருள்களிலும் நம் கட்புலனாகும் உயிரற்ற உலகங்களிலும் காணப்படும் அமைப்புகள் நேர்வழிகாட்டா அதலினாற் றான் நம் தெய்வ ஆசிரியர் மெய்கண்டதேவ நாயனார் முழுமுதற் கடவுள் உண்டென்பதனைத் துணிதற்கு உயிரற்ற உலக அமைப்பினை முதலில் கூறாமல், ஆண்பெண் அமைப்பினையே அவன் அவள் என முதலிற் கூறினார். அங்ஙனம் ஆண் பெண் அமைப்பின் வழியே தெள்ளிதிற் றுணியப்படும் முழுமுதற் கடவுள் உண்மைக்குப், பின்னும் ஒரு சான்றாக உலகவமைப் பினையும் “அது” என்னும் ஒரு சொல்லால் அதனை யடுத்துக் கூறலுற்றார். இத்துணை நுட்பமாக ஆண் பெண் அமைப்பையே முதலில் எடுத்துக் காட்டி, அவ்வாற்றால் முழுமுதற் கடவுள் உண்மை தேற்றிய ஓர்

66

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/154&oldid=1592884" இலிருந்து மீள்விக்கப்பட்டது