உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130

மறைமலையம் - 31

சிரியர். மெய்கண்ட தேவரைத் தவிர வேறெவரையும் வேறெங்குங் கண்டிலேம். மற்றையாசிரிய ரெல்லாம் உலக வமைப்பின்மேல் வைத்தே கடவுளுண்மையினை நிறுவலாயினர். உயிரற்ற உலக வமைப்பு இயற்கையில் உண் டாவதென்று பகர்தற்கும் இடந் தருதலால், அது கடவு ளுண்மையைத் தேற்றுதற்கு, ஆண் பெண் அமைப்பைப் போல் அத்துணைச் சிறந்ததன் றென்பது நுண்ணறிவினார்க் கெல்லாம் நன்கு விளங்கா நிற்கும்.

இனி, இங்ஙனமாக உயிர்கள் எல்லாவற்றிலும் ஆண் பண் அமைப்பை வகுத்தமைத்த முழுமுதற் கடவுள் ஒருவர் கட்டாயமாய் இருக்கவேண்டு மென்பது துணியப் பட்டாற் போலவே, அம் முழுமுதற் கடவுளும் ஆண்பெண் பண் உரு ஒன்றுகூடிய இயற்கையினராகவே யிருப்பரென் பதூஉம் ஆராய்ந்து காட்டுவாம். உயிர்களிடத்தே காணப் படும் ஆ ண்பெண்ணமைப்பு, அதனைத் தோற்றுவிக்க முனைந்த இறைவனது அறிவின்கண் முதலில் உருவு கொண்டு தோன்றி, அதன்பின் அவனால் உயிர்களுக்குப் படைத்துக் கொடுக்கப் பட்ட உடம்புகளில் அமையலாயிற் றென்றறிதல் வேண்டும். ஏனென்றால், நங் கட்புலனாகும் பருப்பொருள் களில் ஒருவன் ஒருவடிவினைச் சமைக்கப் புகுங்கால், அதனை அவன் அவற்றிற் சமைத்தற்கு முன்னமே தான் சமைக்கக் கருதிய உருவினைத் தன் அறிவின்கண்ணே முதலிற் சமைத்துக் கொள்ள வேண்டியவனா யிருக்கின்றான். அங்ஙனம் அவ் வுருவினை அவன் அகத்தே தன்னறிவின்கட் சமைத்துக் கொண்டிலனேற், புறத்தே தான் சமைக்கக் கருதிய வடிவினைச் செய்து முடிக்க மாட்டுவான் அல்லன். மாற்றுயர்ந்த பொற்கட்டியில் ஆண்பாவையையோ அல்லதொரு பெண் பாவையையோ செய்ய வேண்டினான் ஒரு தட்டான் முதலில் அதனைத் தன்னறிவின்கண் தெளிவாக அமைத்துக் காள்ள வேண்டியவனா யிருக்கின்றான். சிறந்த ஓர் அடுக்கு மாளிகை யினைக் கட்ட வேண்டினான் ஒரு கொற்றன் முதலில் அதனைத் அறிவின்கண் திட்டமாய் அமைத்துக் கொள்ள வேண்டியவனா யிருக்கின்றான். அழகிய ஒரு மலைக்காட்சி யினையோ அல்ல தங்குள்ள ஒரு மயிலின் வடிவத்தையோ அல்ல தங்குள்ள வேட்டுவ மாதரையோ ஓவியமாக

தன்

.

ஓர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/155&oldid=1592885" இலிருந்து மீள்விக்கப்பட்டது