உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* தமிழர் மதம்

131

வரையவேண்டினான் ஓர் ஓவியன், முதலில் அவற்றை அழகிய வகையாகத் தன் உள்ளத்தின்கண் திறமாக அமைத்துக் கொண்டு, அதன்பிறகே புறத்தில் வண்ணங் களைக் குழைத்து இரட்டுத் துணிமேல் அவற்றை யொக்கும் வடிவினை வரைகுவன். இங்ஙனமே, இன்னும் எவ்வெவ்வ மைப்புகளைப் புறத்தே அமைக்க வேண்டினும், அவை தம்மை அமைக்கப் புகுவார் முதலில் அவற்றைத் தம் அறிவின்கண் அமைத்துக் கொண்டு செய்துவருதலை நாம் ஒவ்வொரு நொடியும் மக்களின் உலகியலொழுக்கத்தில் நேரே காணலாம். தம் அறிவின்கண் அமைத்துக் கொள்ளாத ஓர் அமைப்பைச் சிலர் வெளியே செய்யமாட்டாமல் விழித்தலும், வேறு சிலர் தம் அறிவின்கண் அரைகுறையாய் எண்ணியவற்றை வெளியேயும் அரைகுறையாய்ச் செய்து பிழைபடுதலும், இத்தன்மையினார் அறிவில்லா மடைய ரென்றும் பேதையரென்றும் உலகத்தாரால் இகழப்படுதலும் நாம் நாடோறும் நம் வீட்டின் அகத்தும் புறத்துங் கண்டு வருகின்றனம் அல்லமோ? ஆதலால், வெளியே எந்த அமைப்பினைச் செவ்வனே அமைத்து முடித்தற்கும், நம் உள்ளே நமதறிவின்கண் அதனைச் செவ்வனே அமைத்துக் கொள்ள வேண்டுவது இன்றியமை யாததாய் இருக்கும் முறை இனிது விளங்கற் பாலதேயாம். ஆகவே, இந்நிலவுலகத்துள்ள எண்ணிறந்த கோடியுயிர் களிலுங் காணப்படும் ஆண் பெண்ணமைப்பு எல்லையில்லா ஒரு பேரறிவினாலன்றி உண்டாதல் செல்லாமையானும், அத்தகைய பேரறிவுங்

கட

வுளிடத்தன்றி காணப்படுதல் இல்லாமையானும், இவ் விருவேறு வகையான அமைப்பும் உயிர்கள்பாற் றோன்றுதற்கு முன்னமே இதற்கு மூலமான ஓர் ஆண்பெண் உரு இறைவன் தறிவின்கட்டோன்ற வேண்டுவது இன்றியமை யாததாய் இருத்தலானும், அறிவுருவாய் விளங்கும் இறைவன் ஆண் பெண் அல்லது தாய் தந்தையர் உருவாயே இருப்பனென்பது முடிக்கப்படும். இதுபற்றியே, இற்றைக்குச் சிறிதேறக் குறைய இரண்டாயிர ஆண்டுகட்கு முன் இயற்றப்பட்ட தனிச் செந்தமிழ் நூல்களில், “நீல மேனி வாலிழை பாகத் தொருவனது இருதாள் நிழற்கீழ் மூவகை யுலகும் முகிழ்த்தன முறையே”

வேறு சிற்றுயிர் எதன்கண்ணுங்

(ஐங்குறுநூறு)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/156&oldid=1592886" இலிருந்து மீள்விக்கப்பட்டது