உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132

என்றும்,

66

மறைமலையம் - 31

'கண்ணி கார்நறுங் கொன்றை காமர் வண்ண மார்பிற் றாருங் கொன்றை, ஊர்தி வால்வெள் ளேறே சிறந்த சீர்கெழு கொடியும் அவ்வே றென்ப கறைமிட றணியலும் அணிந்தன்று, அக்கறை மறைநவில் அந்தணர் நுவலவும் படுமே, பெண்ணுரு ஒருதிறன் ஆகின்று, அவ்வுருத் தன்னுள் ளடக்கிக் கரக்கினுங் கரக்கும், பிறைநுதல் வண்ணம் ஆகின்று, அப்பிறை பதினெண் கணனும் ஏத்தவும் படுமே, எல்லா உயிர்க்கும் ஏம மாகிய நீர் அற வறியாக் கரகத்துத்

தாழ்சடைப் பொலிந்த அருந்தவத் தோற்கே”

(புறநானூறு) என்றும் போந்த கடவுள் வாழ்த்துச் செய்யுட்களில் இறைவன் ஒருபாற் பெண்ணுருவும் உடையனாய்த் திகழ்தல் தெளித்துச் சால்லப்பட்டமை காண்க. இனிப், பண்டைத் தமிழாசிரியர்க்குப் பின்னுஞ், சைவசமய முதலாசிரியராய் இற்றைக்கு ஆயிரத்தறு நூறாண்டுகளுக்கு முன்னுந் தோன்றிய மாணிக்கவாசகப் பெருமானும்,

“குவளைக் கண்ணி கூறன் காண்க! அவளுந் தானும் உடனே காண்க! பரமா னந்தப் பழங்கட லதுவே”

எனவும்,

“பைங்குவளைக் கார்மலராற் செங்கமலப் பைம்போதால் அங்கங் குருகினத்தாற் பின்னும் அரவத்தால் தங்கண் மலங்கழுவு வார்வந்து சார்தலினால் எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்றிசைந்த பொங்கு மடுவிற் புகப்பாய்ந்து பாய்ந்துநஞ் சங்கஞ் சிலம்பச் சிலம்பு கலந்தார்ப்பக்

கொங்கைகள் பொங்கக் குடையும் புனல்பொங்கப்

பங்கயப் பூம்புனல்பாய்ந் தாடேலோ ரெம்பாவாய்”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/157&oldid=1592888" இலிருந்து மீள்விக்கப்பட்டது