உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* தமிழர் மதம்

133

எனவும் அருளிச் செய்திருக்குந் திருவாசகத் திருப்பாட்டு களிலும் எல்லாம் வல்ல முழுமுதற் வல்ல முழுமுதற் கடவுள் ஒருபால் ஆணுருவும் ஒருபாற் பெண்ணுருவும் ஒருங்கு கலந்த அம்மை யப்பராய் விளங்கும் உண்மை நன்கெடுத்துக் கா காட்டப் பட்டிருத்தல் கருத்திற் பதிக்கற் பாற்று. இனி, மாணிக்க வாசகர்க்குப் பின்வந்த திருஞான சம்பந்தப்பெருமான்,

“பேதையா ளவளொடும் பெருந்தகை யிருந்ததே”

என்றுந், திருவநாவுக்கரசு நாயனார்,

66

“மைப்படிந்த கண்ணாளுந் தானுங் கச்சி மயானத்தான்”

என்றும், சுந்தரமூர்த்தி நாயனார்,

“படைத்தாய் ஞான மெலாம்படர் புன்சடை யெம்பரமா

உடைத்தாய் வேள்விதனை உமை

யாளையொர் கூறுடையாய்"

என்றும் அருளிச் செய்திருக்குந் தேவாரத் திருச் செய்யுட்களும் பண்டைத் தண்டமிழ்த் தொல்லாசிரியர் மொழிந்த படியே, இறைவன் தாய் தந்தையர் உருவினனாய்த் திகழும் வாய்மை யினை வற்புறுத்துரைத்தல் காண்க.

2

னிப், பண்டை நாகரிக மக்களில் முதன்மையுற்றவராக ஆராய்ச்சிவல்ல ஐரோப்பிய ஆசிரியரால் துணியப் பட்ட எகுபதியர்' என்னும் மாந்தர் முழுமுதற் கடவுளை ஓஸைரிஸ்2 எனப் பெயரிய அப்பனாகவும், ஐஸிஸ்3 எனப் பெயரிய அம்மையாகவும் வைத்து வழிபட்டு வந்தன ரென்பது அவர் பொறித்திருக்கும் ஓவிய எழுத்துக்களாற் புலனாகின்றது.

4

அங்ஙனமே, அவரோடொத்த பழைய நாகரிக மக்களான பாபிலோனியரும், எல்லாம் வல்ல இறைவனை ஏ எனப் பெயரிய அப்பனாகவும், தவகிநா5 எனப் பெயரிய அம்மையாகவும் வைத்து வணங்கி வந்தனர்.

இப் பாபிலோனியர், எகுபதியரைப் போலவே பண்டை நாகரிகத்திற் சிறந்தவரான சாலடியர் என்னும் மாந்தரும் ஊர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/158&oldid=1592889" இலிருந்து மீள்விக்கப்பட்டது