உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134

மறைமலையம் - 31

என்னும் மாநகரில் எழுப்பிய எழுநிலைக் கோபுரம் வாய்ந்த தமது மாபெருங் கோயிலில் ஒளிவடிவினனாய் விளங்குந் தம் கடவுளை ஸமஸ் எனப் பெயரிய அப்பனாகவும், இஸ்தர் எனப் பெயரிய அம்மையாகவும் வைத்து வழிபாடாற்றி வந்தனர்.

இன்னும் இங்ஙனமே மேனாடு கீழ் நாடுகளிற் பண்டை நாளில் நாகரிகத்திற் சிறந்து விளங்கிய பினீசியர், அசீரியர், கிரேக்கர், உரோமர், துயூத்தானியர், மெகுசிகர், பெரூவியர் முதலாயினாரெல்லாம் முழுமுதற் கடவுளை அம்மையப்பர் வடிவாகவே வைத்து வழிபாடு செய்து வந்த வரலாறு களெல்லாம் இங்கே எடுத்துரைப்பின் இது மிக விரியும்.

8

அற்றேல், ஒரு முழுமுதற் கடவுள் நம்பிக்கையிற் சிறந்த பண்டை மக்களான எபிரேயர் தாம் வணங்கிய கடவுளை அங்ஙனம் ஆண் பெண் வடிவினராக வைத்து உரையாமை என்னை யெனின்; அவருங் கடவுளை அம்மையப்பராகவே கொண்டு வணங்கி வந்தனரென்பது அவரது மறையின் "படைப்பின் தோற்றம் "9 என்னும் முதற்பகுதியில் வெளிப் படையாகச் சொல்லப்படாவிடினும் குறிப்பாகச் சொல்லப் பட்டேயிருக்கின்றது.

66

யொப்பவே நாம்,

மகனை

"நமதுருவில் நம்மை ம உண்டாக்கக் கடவேம்” எனக் கடவுள் தம் மனைவியாரை நோக்கிக் கூறினாரென்றும் (1,26), அங்ஙனங் கூறிய வண்ணமே. 'கடவுள் மகனைத் தமதுருவை யொப்பவே ஆணும் பெண்ணுமாய்ப் படைத்தனர்” என்றும் (1,27) அதன்கண் நுவலப்பட்டிருத்தலை நோக்கும்போது, முழு முதற் கடவுள் அம்மையப்பர் வடிவினராகவே இருந்து, தம்மை யொப்பவே உயிர்களை ஆண் பெண் வடிவிற் றோற்றுவித்தனரென்னுங் கோட்பாடு பண்டைநாள் எபிரேயர்க்கும் உண்மையாய் இருந்தமை தெற்றெனத் துணியப்படும்.

ஆகவே, பண்டைக் காலத்தில் இந்நிலவுலகின் பல பகுதிகளிலும் உறைந்தவரான நாகரிக மக்கட் குழுவினர் அனைவரும் எல்லாம் வல்ல முழுமுதற் கடவுளை அம்மை யப்பர் வடிவினராகவே வைத்து வழிபட்டு வந்தன ரென்பதூஉம், அவ்வாறு அவரெல்லாம் இறைவனைத் தாய் தந்தையர் வடிவில் வைத்து வழிபட்டு வருதற்கு அவருட்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/159&oldid=1592890" இலிருந்து மீள்விக்கப்பட்டது