உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* தமிழர் மதம்

141

இத்தகைய ஐம்பெரும் பொருள்களையும், இவற்றை யறியும் மெய் வாய் கண் மூக்குச் செவி என்னும் புறக் கருவி களையும் மனம் என்னும் அகக்கருவியையும் அடையப் பெற்ற மக்கட் பிறவியினராகிய நாம், இவை தம்மை யெல்லாம் நாம் கேளாதிருக்கையிலும் நமக்கு அமைத்துக் கொடுத்த எல்லா அறிவும் எல்லா ஆற்றலும் எல்லா இரக்கமும் ஒருங்கு வாய்ந்த இறைவன் ஒருவன் உளன் என்பதைத் தெரிந்து கொண்டபின், அவனை நேரே நங்கட் புலனாற் காண்டற்குங், கண்டு அவன் றிருவுருவினை வணங்குதற்கும் அடங்கா வேட்கை மீதூரப் பெற்று, நங் கண்கட்குப் புலனாகும் பொருள்களுள் எதன்கண்ணே அவன் முனைத்து நின்று விளங்குகின்றான் என்று ஆராய்ந்து தெளிதற்குப் பெருமுயற்சி செய்பவர்களாய் இருக்கின்றனம் அல்லமோ? ஆனால், இப்போது நாம் இம் முயற்சியிற் பயன்பெறுபவர்களாய் இல்லாவிட்டாலும், நமக்குப் பல்லாயிர ஆண்டுகளுக்கு முன்னமேயிருந்த நந் தமிழ் முன்னோர்கள் அம்முயற்சியிற் பயன் பெற்றவர் களாய்க், கடவுளைத் தாம் நேரே கண்டதுமல்லாமல், அவரைக் காணமாட்டா ஏழையறிவினராகிய நாமும் அவரை நேரே கண்டு களிக்குமாறு

இருக்கின்றார்கள்.

நமக்குக் காட்டி வைத்தும்

முழுமுதற் கடவுள் தாம் வகுத்தமைத்த இவ்வைம் பெரும் பொருள்களின் உள்ளும் புறம்பும் எங்கும் நிறைந்து நிற்பவராயிருக்கின்றார். அவர் உள்ளிருக்கப் பெறாத பொருளும், அவரிலிருந்து நிலவாத பொருளும் எங்கும் இல்லை. அவர், உயிர்களாகிய நம் பொருட்டே, சிற்றுயிர் களாகிய நாம் பேரறிவும் பேரின்பமும் பெறும் பொருட்டே நம்பால் வைத்த பேரிரக்கத்தாற் பேரருளால் இத்தனைப் பொருள்களையும் நாம் பிறவி யெடுப்பதற்கு முன்னமே அமைத்து வைத்திருக்கின்றார். இத்தனை இரக்கமும் இத்தனை அருளும் நம்பால் வைத்திருக்கும் நம் ஐயன், நம் ஆண்டவன், நம் மெய்யான அப்பன், நம் மெய்யான தாய், தாமே காணமாட்டாத நம் எளிய கண்முன்னே தன்றிரு வுருவினை நேரே விளங்கக்காட்டி நமக்கு அருள்செய்யா தொழிவனோ? ஒழியானன்றே. ஆனாற், சிலர், கடவுள் மக்களின் சிற்றறிவுக்கும் ஊனக் கண்ணுக்கும் ஒருவாற்றா னும் புலப்படாதவன் என்றும், அவன் உயிருள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/166&oldid=1592898" இலிருந்து மீள்விக்கப்பட்டது