உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142

  • மறைமலையம் - 31

பொருள் உயிரில்பொருள் என்னும் எல்லாவற்றின் நிலையை யுங் கடந்து அருவாய் நிற்பவன் என்றும், ஆகையால் அவனை உருவமாக வைத்து வணங்குதலும் வாழ்த்துதலும் பயனற்ற செயல்களாமென்றுங் கரையா நிற்கின்றனர். இது கடவுளின் உண்மை நிலையை ஆழ்ந்து ஆராய்ந்து பாராதவர் கூற்றென்றே, அதனை ஆழ்ந்தாராய்ந்தார் உணரா நிற்பர். ஏனென்றாற், கடவுள் பேரறிவுப்பொருள் என்பதும், அறிவெல்லாம் உருவத்தைப்பற்றி நிற்குமல்லது அருவத்தைப்பற்றி நில்லா தென்பதும், இவ்வுலகத்திலும் இவ்வுயிர்களின் உடம்புகளிலுங் காணப்படும் எண்ணிறந்த உருவ மைப்புகள் அத்தனைக்கும் மூலமான அறிவுருவம் இறை வன்றன் றிருவுள்ளத்தின்கண் அமைந்திருக்கு மாதலால் இறைவனறிவு உருவமாயே விளங்கு மல்லது அருவமாய் இராதென்பதும் முன்னமே விளக்கிக் காட்டியிருக்கின் றேம். எமது ‘சைவசித்தாந்த ஞானபோதம்' என்னும் நூலிற் "கடவுளுக்கு அருளுருவம் உண்டு" என்னுங் கட்டுரையிலும் அதனை விரிவாயெடுத்து விளக்கியிருக் கின்றேம். ஆகவே, எல்லாப் பொருள்களிலும் நிறைந்து நிற்கும் முதல்வன், அப்பொருள்கள் எல்லாவற்றின் உருவமுந் தனது பேரறிவின்கண் உடையனாய், அப்பொருள்களின் உள்ளும் புறம்பும் அணுக்கமாய் நிற்பனேயன்றி, அவற்றிற்குச் சேயனாய், உயிர்களின் அறிவுக்கும் நினைவுக்கும் எட்டாத, எவற்றையும் மேற்கடந்த அருவநிலையில் நிற்பான் அல்லனென்பதே தேற்றமாம். அஃது எதுபோல வெனின்; பொருள்களின் வடிவினைத் தன்கண் விளங்கக் காட்டும் ஒரு கண்ணாடி அப்பொருள்களின் அருகேயிராமல் அவற்றை விலகி நெடுந் தொலைவிலிருக்குமாயின் அவற்றின் வடி வினைத் தன்கண் ஒரு சிறிதுங் காட்டமாட்டாதது போலவென்க. அற்றேல், தொலைவுநோக்கி என்னுங் கண்ணாடி எத்தனையோ கோடி நாழிகை வழிக்கு அப்பால் அகன்றுள்ள பகலவன் முதலான மண்டிலங்களின் லங்களின் உருவங்களைத் தன்கண் அணிமையில் வைத்துக் காட்டுதல் என்னையெனின்; தொலைவு நோக்கியும் பகலவனது முழு வடிவினையுங் காட்டவல்லதன்று; அவனது வடிவந் தனக்கு எத்துணை அணிமையிற் றோன்றுகின்றதோ அத் துணைக்கே அதனைக் காட்டவல்லது; அதனால் தொலைவு நோக்கியுங் கோள்கள் நாள்களின் அணிமையின்

6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/167&oldid=1592899" இலிருந்து மீள்விக்கப்பட்டது