உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழர் மதம்

143

அளவுக்கே அவற்றின் வடிவினைக் காட்டுமல்லாமல், எட்டுணையும் அளவு தெரியாச் சேய்மையில் அகன்றிருப்பன வற்றை அவை காட்டமாட்டாவென்று தேர்ந்துகொள்க.

இருள்வடிவினவென்றும்

இனி, அறிவெல்லாம் ஒளிவடிவினவென்றும் அறி யாமையெல்லாம் நினைவிற் பதித்தல்வேண்டும். எங்கெல்லாம் ஒளிவிளக்க மிருக் கின்றதோ, அங்கெல்லாம் நமக்குக் கண்ணுங் கருத்தும் விளக்கம் உடையனவாய்த் திகழ்கின்றன. அவ்வாறு ஒளி விளக்கஞ் சிறிதுமின்றி எங்குந் திணித்த இருளே பரவி நிற்குமாயின், அங்கே நங் கண்ணுங்கருத்தும் விளங்கா மையும் எவரும் அறிந்ததேயாம். ஆகவே, ஒளிவிளக்கமே அறிவுவிளக்க மென்றும், அஃதல்லாத இருட்பெருக்கமே அறியாமைப் பருக்கமென்றுந் தேர்ந்து கொள்ளல் வேண்டும். ஞாயிறு திங்கள் தீ யென்னும் ஒளியுடைப் பொருள்கள் எவையுமே இவ்வுலகத் தில்லையாயின், எங்கும் Fணிந்த இருளே செறிந்து நிற்குமாயின், மக்களே யன்றி ஓரறிவு வாய்ந்த புற்பூண்டுகள் தாமும் இந்நிலவுலகத்தின் கட் காணப்படுமோ? உரைமின்கள்! எனவே, ஒளி விளக்கமே உயிர்விளக்க மென்றும், அவ்வுயிர் களின் அறிவு விளக்க மென்றுங் கடைப்பிடித்துணர்தல் வேண்டும்.

நெருப்புக்குச்சியி

க்

இங்ஙனம் உயிர்களின் உயிர்வாழ்க்கைக்கு மட்டுமே யன்றி அவற்றின் அறிவு வாழ்க்கைக்கும் ஒளியின் உதவி இன்றியமை யாது வேண்டியிருத்தலாலும்; உயிர்களே இவ்வொளியினை னுதவியால் உண் கிக்கொள்ள வல்லனவெனின்; உயிர்கள் பிறவியெடுத்து நெருப்புக்குச்சியை உண்டாக்கிக் கொள்ளுதற்கு முன்னம் ஒளியின் உதவினாலேயே அவை இப்பிறவிக்கு வரக் காண்டலின் இவ்வுயிர்களின் தோற்றத்திற்கு இன்றியமை யாக் காரணமாய் முதல் நிற்கும் ஒளியைப் பின்வந்த மக்கள் உண்டாக்க வல்லரென்றல் இசையாமையாலும் ஒளியே கடவுளென்று அல்லது கடவுளின் றிருவுருவமென்று கொள்ளுதலே பொருத்த முடைத்தாம்.

மேலும், நம்போன்ற சிற்றுயிர்கள் அத்தனையும் பிறி தொன்று அல்லது பிறரொருவர் விளக்கினால் விளங்கும் அறிவுடையனவேயன்றித் தாமாகவே விளங்கும் அறிவின

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/168&oldid=1592900" இலிருந்து மீள்விக்கப்பட்டது