உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144

மறைமலையம் - 31

அல்ல; ஏனென்றால், அவை யியற்கையிலேயே அறியாமை யாற் ஏ கவரப்பட்டிருக்கின்றன. மற்று, இறைவனோ எண் ணிறந்த உலகங்களையும் அவ்வுலகங்களிலுள்ள எண் ணிறந்த

பொருள்களையும் அவை தம்மில் உலவும் எண் ணிறந்த உயிர்களின் எண்ணிறந்த உடம்புகளையும் படைக் கத்தக்க எல்லையற்ற பேரறிவும் எல்லையற்ற பேராற்றலும் வாய்ந்தவ னாதல் தெற்றெனத் துணியப்படுதலால், அவனி டத்தில் அறியாமை ஒரு சிறிதுமே இருத்தல் இயலா தென்பதும், அவன் என்றும் விளங்காநின்ற அறிவொளியினதாயே திகழ்வ தென்பதும் நந்தமிழ் முன்னோர் கண்ட முடிந்த உண்மைகளாம் என்று தெளிந்துகொள்க. அதனா லன்றோ இற்றைக்கு ஐயாயிர ஆண்டுகளுக்கு முன்னரே வயங்கிய தமிழ்ப் பேராசிரியரான தொல்காப்பியனார்,

“வினையின் நீங்கி விளங்கிய அறிவின்

முனைவன் கண்டது முதல் நூல் ஆகும்”

என்று அருளிச்செய்தார். அருமருந்தன்ன இந் நூற் பாவிற், பண்டைத் தமிழ்ச் சான்றோர் கடவுளைப் பற்றித் தெளித்துக் கண்ட கருத்துக்கள் அத்தனையும் ஒரு சிறு கடுகளவுவித்தில் அடங்கிய ஒரு பேராலமரம்போல் அடங்கிக் கிடத்தலின் அவை தம்மை ஒரு சிறிது ஆராய்ந்து காட்டுதல் இன்றி யமையாததாய் இருக்கின்றது. கடவுள் இயல்பாகவே வினையின் நீங்கியவன் என்கின்றார் தொல்காப்பியர். வினை என்பது செயல் அல்லது தொழில் என்று பொருள்படும். ஒருவன் ஒரு செயல் செய்வது தனக்குள்ள துன்பத்தை நீக்கித் தனக்கு இன்பத்தை வருவித்துக் கொள்ளுதற்கேயாகும். எல்லா உயிர்களுக்கும் உள்ள துன்பமானது முதன்முதற் பசியையுங் காமத்தையும் அடிப்படையாய்க் கொண்டு தோன்றி அவ்வுயிர் களை வருத்திவரும் வகையினை முன்னமே விளக்கிக்காட்டி யி ரு க்கின்றேம். உயிர்கள் பிறவிக்கு வருங்கால் முழுதும் அறியாமையால் மூடப்பட்டிருத்தலையும், அப்போது அவற்றின் வயிற்றகத்துள்ள பசித்தீ அவைகளை வருத்த அவை வாய் திறந்து அழுதலையும், அவ் வழுகைக் குரலைக் கேட்ட தாய் உடனே அவற்றை யணுகிப் பாலூட்ட அவை அத் துன்பந் தீர்ந்து இன்புற்றிருத்தலையும் அங்ஙனமே மேலெடுத்துக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/169&oldid=1592901" இலிருந்து மீள்விக்கப்பட்டது