உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழர் மதம்

க்

145

காட்டியிருக்கின்றேம். அவை கொண்டு, உயிர்கள் தமக்குள்ள துன்பத்தை நீக்கிக்கொள்ள முதன் முதற் செய்யும்வினை வாய்திறந்து அழுதலே யாமென்பது பெறப்படுகின்றதன்றோ? ஒரு சிறுமகவு தனக்குள்ள துன்பத்தைத் தானே தீர்த்துக் கொள்ள அறியாமை யாலன்றோ வாய் திறந்தழுகின்றது? தானே முயன்று பொருள் தேடித் தனது பசித்துன்பத்தை நீக்கிக் கொள்ளும் அறிவும் ஆற்றலும் வந்தபின் ஓர் ஆண்மகன் அங்ஙனம் வாய் திறந்தழுவனா? அழானன்றோ? ஆதலால், அறியாமையாற் கவரப்பட்டிருக்கும் நிலையில் முதன்முதற் றோன்றும் வினை ஆற்றாது அழுதலேயாமென்பது பெறப்படும். எனவே, எந்த உயிருந் துன்பத்திற் புதைந்து கிடந்து அதனினின்றுந் தன்னை விடுவித்துக் கொள்ளும் அறிவும் ஆற்றலும் இல்லாதிருக்குங்காறும் அதன்பால் ஆற்றாமையும் அது காரணமாக வரும் அழுகை வினையுந் தோன்றாதிரா. இவ் விரண்டு வினையுங் கண்பூவாக் குழவியின் மாட்டுமே யன்றிக், கலைவல்ல புலவர்மாட்டுங் கண்ணகன் ஞாலங் காக்குங் காவலர் மாட்டுங் காணப்படு வனவாகவே கருதப் படுகின்றன. ஆக வே, எத்தகைய வினையுந் துன்பத்தை நீக்குதற்பொருட்டுத் தோன்றுவ தொன்றாய் நன்கு விளங்கிக் கிடத்தலாலுந், துன்பத்தையுடைய நம் போன்ற சிற்றுயிர் கட்கன்றித் துன்பமே சிறிதுமில்லாது இன்பமே முழுதும் உடைய இறைவற்கு எத்தகைய வினையுஞ்செய்ய வேண்டுவதில்லாமை யாலும், எல்லாச் சிற்றுயிர்களும் பிறவிக்கு வருங்கால் தமக்குள்ள துன்பத்தைத் தாமே நீக்கிக் கொள்ள வல்ல வகை அறியாமல் முதன்முதல் அழுகை வினையிலேயே தமதுயிர் வாழ்க்கையினைத் தொடங்குதல்போல, இறைவனும் வினை யுடைய னாயின் அவனும் அறியாமையும் ஆற்றாமையுங் காரணமாக வரும் வினையிலேயே தனது முயற்சியைத் தாடங்கினானாகல் வேண்டும் எனப்பட்டு அவனுக்கும் ஏனைச் சிற்றுயிர்கட்கும் வேறுபாடு இல்லையாய் முடியுமாத லாலும் இறைவனும் வினையுடையனெனக் கூறுவது பெரிதும் பிழை பாடுடைத்தா மென்க.

அற்றன்று, இறைவன் தனக்கொரு துன்பமுங் குறை பாடும் இல்லானாகலின், அவன் வினை செய்வனென்பது, துன்பமுங் குறைபாடும் நிரம்பிய சிற்றுயிர்கட்கு அவற்றை நீக்குதற்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/170&oldid=1592902" இலிருந்து மீள்விக்கப்பட்டது