உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146

மறைமலையம் - 31

பொருட்டே யாகலின், அஃதவன் இறைமைக் குணத்திற்கு இழுக்காதல் யாங்ஙனமெனிற் கூறுதும். அறியாமையின் வயப்பட்டுக் கிடக்குஞ் சிற்றுயிர்கள் கடல் மணலினும் அளவு படாதனவாய் இருக்கின்றன. இவை யவ்வளவும் அறியாமை வ யாற் கவரப்பட்டிருப்பினுந் தமக்கென ஓர் அறிவுந் தமக்கென ஒரு செயலும் வாய்ந்தவை களேயாம். உறங்கிக் கொண்டிருக்கும் ஒரு வேங்கைப் புலியும், அங்ஙனமே யுறங்கிக் கொண்டிருக்கும் ஒரு கலைமானும் உறக்கமென்னும் அறியாமையில் அழுந்திக் கிடக்கும் வகையில் அவற்றின் அறிவுஞ் செயலும் புலனாகா விடினும், அவை யுறக்கம் நீங்கி விழித்தவுடனே, வேங்கைப் புலியானது மானைக் கொல்லும் அறிவுஞ் செயலும் உடை யதாதலும், மானோ அப்புலியின் பிடிக்குத் தப்பித் தன்னைக் காத்துக் கொள்ளக் கடுகியோடும் அறிவுஞ் செயலும் உடையதாதலும் பிரிந்து விளங்குதல் காண்மின்கள்!

L

ங்ஙனமே மக்களாகிய உயிர்களும் மற்றைச் சிற்றுயிர்கள் எல்லாமும் அறியாமையினின்று விழித்தவுடன் வேறுவே றறிவும் வேறுவேறு செயலும் உடையனவாய்த், தாந்தாம் விரும்பிய வழியே செல்கின்றன. இத்தனை யுயிர்களுந் தம்மைப் பாதிந்த அறியாமையிருளினின்றும் விடுபடல் வேண்டி, இறைவன் இவ்வுயிர்களுக்கு அளவில் அடங்காப் பல வேறு உடம்புகளையும் படைத்துக் கொடுத்தலாகிய வினையைச் செய்யுங்கால் உழைப்பினாற் றோன்றும் வருத்தஞ் சிறிதாயினும் உடையனாதல் வேண்டும். அங்ஙனமே அவ்வுயிர்கள் அறியாமையாலுந் தமக்கென உள்ள சிற்றறிவு முனைப்பாலும் இறைவன் றந்த தம் அரிய உடம்புகளையும் அவ்வுடம்பின்கண் உள்ள உறுப்புகளையும் பழுது படுத்துங் கால்; அவ்வுயிர்கள் மேற் சினமும் இரக்கமுங் கொண்டு அவை தம்மைப் பாதுகாக்குமிடத்து இறைவனுள்ளமும் வேறுபாடுறுதல் வேண்டும். இனி, அவ் வுயிர்களின் ஆணவத்தாலுந் தீய சயல்களாலும் அவை தம் முடம்புகள் முற்றுமே பழுதுபட்ட விடத்து, அவ்வுயிர் கள்மேற் பின்னும் மிக்க சினங்கொண்டு அவற்றை யழித்து, அவ்வுயிர்கட்கு வேறு பல உடம்புகளைக் கொடுக்குங்கால் இறைவற்கு வன்குணமும் உண்டாகல் வேண்டும். ஆகவே, படைத்தல் காத்தல் அழித்தல்களை இறைவனே செய்வானாயின், அவனுந் துன்பத்திற்குள்ளாகு வனென்றே கொள்ளல் வேண்டும்; அவ்வாறு கொள்ளின்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/171&oldid=1592903" இலிருந்து மீள்விக்கப்பட்டது