உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* தமிழர் மதம்

147

துன்பத்திற் பட்ட உயிர்களுக்கும் அங்ஙனமே துன்பத்திற்பட்ட றைவற்கும் வேற்றுமையில்லையாய் முடியுமாலெனின்; வ்வியல்பினை முன்னமே ஆராய்ந்துணர்ந்த ஆசிரியர் தொல்காப்பியனார் முதலான பண்டை ச் செந்தமிழ்ச் சான்றோர்கள் இறைவன் அம்மூவகை வினையிற்றொடக் குண்ணான் என்பது தெரிப்பார், “வினையின் நீங்கி விளங்கிய அறிவின் முனைவன்” என்றருளிச் செய்தார் என்பது, ஐயாயிர ஆண்டுகட்கு முன்னே யிருந்த தமிழா சிரியர் கடவுளைப் பற்றிக் கொண்ட இவ்வுயர்ந்த கொள்கை யினையே, பிற்காலத்தில் இற்றைக்கு எழுநூறு ஆண்டுகட்கு முன்னிருந்த ஆசிரியர் ஆ மெய்கண்டதேவருந் தாம் அருளிச்செய்த சிவஞான

போதத்தில்,

"நோக்காது நோக்கி நொடித்தன்றே காலத்திற் றாக்காது நின்றுளத்திற் கண்டிறைவன் - ஆக்காதே கண்ட நனவுணர்விற் கண்ட கனவுணரக் கண்டவனில் இற்றின்றாங் கட்டு

என்று இனிதெடுத்து விளக்கியருளினார்.

அவ்வாறாயிற், படைத்தல் காத்தல் அழித்தல் என்னும் மூன்று வினைகளையும் இறைவன் செய்யினும், அவற்றால் வருந் துன்பந் தன்னைத் தாக்காதபடி அவன் செய்து கொள்ள வல்லானென்று கொள்ளுதலாற் போந்த குற்றம் என்னை யெனின்; தான் செய்யும் தொழிலால் தனக்கு வருந்துன்பந் தன்னைத் தாக்காதபடி செய்து கொள்ளுதலும் ஒரு வினையே யாகலின், அவ்வினையும் ஒருவாற்றாற் கடவுளுக்குத் துன்பந் தருவதேயாகும்; அதனால், அவ்வாறு கொள்ளுதலுங் குற்றமுடைத் தென்பதே பண்டைத் தமிழாசிரியர் கருத்தாதல், மேற்காட்டிய தொல்காப்பிய நூற்பாவின் சொல்லமைப்பை நுனித்துக் காண்டலால் நன்கு புலனாகா நிற்கின்றது. மூவினை களைச் செய்தும் அவற்றால் வருந் துன்பந் தன்னைத் தாக்காது முதல்வன் செய்துகொள்வன் என்பது மேலோர் கருத்தாயின், “வினையை நீக்கி விளங்கிய அறிவின்” என்று ஆசிரியர் தால்காப்பியனார் பிறவினை வாய்பாட்டாற் சூத்திரஞ் செய்திருப்பர்; அவ்வாறு சூத்திரஞ் செய்யாது; “வினையின் நீங்கி விளங்கிய அறிவின்” என்று தன்வினை வாய்பாட்டாற்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/172&oldid=1592904" இலிருந்து மீள்விக்கப்பட்டது