உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* தமிழர் மதம்

6

149

வ்வுலகுயிர்கள்பாற் காணப்படும் அம் மூவினை களைக் காண்டு, அவற்றைச் செய்யும் எல்லாம்வல்ல கடவுள் ஒருவன் உளனெனக் கொள்ளுங் கொள்கை பிழை பாடாய் முடிந்து, கடவுள் இல்லையெனுங் கொள்கையே தமிழசிரியர் கைக்கொண்ட கொள்கையாய்ப் பெறப்படுமா லோவெனின், அற்றன்று. இறைவன் எத்தகைய அறியாமையும் அது காரணமாக வருங் குறைபாடுஞ் சிறிதும் இலனாகலின் அவனது அறிவு என்றும் ஒளி விளக்கம் வாய்ந்ததாகவே திகழாநிற்கும். ஒளியைச் சாரும் பொருள்களெல்லாம் அவ்வொளியினைத் தாமும் பெற்று ஒளி வடிவாய்த் திகழ்தல் எல்லாரும் அறிந்ததே யாம் இருட்காலத் திரவில் இருளைச் சார்ந்து இருள் வடிவாய் நின்ற பொருள்களெல்லாம் விடியற் காலத்தே கீழ்பால் எழூஉங் கதிரவனொளியைக் கண்டு தாமும் ஒளி வடிவாய் விளங்குதலை அறியாதார் யார்? உவாநாள் இரவிற் குளிர்ந்த ஒளிவிளக்க முடையதாய் நீலவானின் மேலே விளங்கும் வெண்மதியத்தின் ஒளி அம்மதியத்திற்கு எங்கே யிருந்து வந்தது? கதிரவனொளியி லிருந்தன்றோ? இங்ஙனமே இறைவன் என்றும் விளங்கின அறிவொளியினனான சுடர் விரிந்து திகழாநிற்ப, அவ் வறிவுச் சுடரொளி பட்ட வளவானே, மாயை மாயை என்னும் அறிவில் பொருளும் உயிர்கள் என்னுஞ் சிற்றறிவுப் பொருளும் ழுங்கின்றி நின்ற அருவநிலை12 மாறி ஒழுங்குற்று நிற்கும்13 உருவநிலைக்கண் வருவவாயின, இயற்கையொளிப் பொருள்,

யற்கை யொளியில்லா ஏனையொரு பொருள் தன்னைச் சார்ந்தவளவானே அதனையும் ஒளிவடிவின தாக்குதல், விளக்கொளியில் ஒளிவிளக்க முடையதாய் மிளிரும் ஒரு பளிங்குத் துண்டினிடத்துங் காணப்படும். இங்ஙனமே, காந்தக்கல் ஓர் இரும்பூசியைத் தன் மாட்டு இழுத்துக் கொள்வ துடன், அவ்வூசி சிறிது காலந் தன்னுடன் ஒட்டியபடியே யிருக்குமாயின், பின்னர் அது மற்றோர் இருப்பூசியைத் தன்மாட்டு ஈர்த்துக் கொள்ளுமாறும் அதற்கு அவ்விழுக்கு மாற்றலைத் தருகின்றது. அறிவில்லாப் பொருள்களே இங்ஙன மாகத் தாம் நின்ற நிலை திரியாமல், மற்றைப் பொருள்களின் நிலையைத் திரிபடையச் செய்யு மானால், முழுதும் விளங்கிய இறைவன்றன் அறிவொளி தனது நிலை திரியாமல் நின்றே, படைத்தல் காத்தல் அழித்தல் என்னும் வினைகளை மாயையினிடத்தும் உயிர்களினிடத்தும் ளைக்குமென்பதை நாம் விண்டு விளம்புதலும் வேண்டுமோ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/174&oldid=1592907" இலிருந்து மீள்விக்கப்பட்டது