உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150

மறைமலையம் - 31 ×

இவ்வாறு இறைவன் அறிவுப் பேரொளி யினனாய் ஏதொரு வினையுஞ் செய்யாமலே சுடர்ந்து திகழாநிற்க, மாயையும் உயிர்களும் அவ் வறி வொளியின் தோற்றத்தளவிலேயே, தமது கலங்கிய அருவ நிலை மாறித் துலங்கிய உருவநிலை எய்தும் உண்மை யினை நம் பண்டைத் தமிழாசிரியர் கண்டறிந்தமை,

66

'மன்னுசிவன் சந்நிதியின் மற்றுலகஞ் சேட்டித்த

தென்னு மறையின் இயன்மறந்தாய் சொன்னசிவன்

கண்ணா வுளம்வினையாற் கண்டறிந்து நிற்குங்காண் எண்ணான் சிவன் அசத்தை யின்று’”

என ஆசிரியர் மெய்கண்ட தேவர் 'சிவஞான போதத்' தின்கண் அருளிச் செய்தவாற்றானும் பெறப்படும். இன்னும் இறைவன் பேரொளியுருவினனாயுந், தன்னைச் சார்ந்த மையால் உண்டான மாயையின் ஒளி வடிவுகளாகிய ஞாயிறு திங்கள் தீ என்னும் மூன்று மூன்று ஒளி வடிவுகளின் உள்ளொளியாய்த்

திகழ்பவனாயும் நிற்கின்றானென்னும் இவ்வுண்மை,

“ஓதி யாரும்அறி வார்இலை ஓதி யுலகெலாஞ் சோதி யாய் நிறைந் தான்சுடர்ச் சோதியுட் சோதியான் வேதியாகிவிண் ணாகிமண் ணோடெரி காற்றுமாய் ஆதி யாகிநின் றானும்ஐ யாறுடை ஐயனே

எனத் திருஞானசம்பந்தப் பெருமான் அருளிச் செய்த தேவாரத் திருப்பாட்டின்கண் எடுத்து வற்புறுத்தப்பட்டமை காண்க. இங்ஙனம் அறிவொளியினனாய்த் துலங்கா நின் ற முதல்வன் தான் படைத்தல் காத்தல் அழித்தல் ஆகிய முத்தொழில் களையும் முனைந்து செய்யாமலே நிற்க, அவனைச் சார்ந்த உயிர்களில் அவன்றன் அறிவொளியினை நேரே பெறத்தக்க வாய்ப்புடைய சில சிறந்த உயிர்கள் அவன்றன் அறிவொளி யினால் உந்தப்பெற்று அம்முத் தொழில்களைப் புரியா நிற்குமென்னும் உண்மை மாணிக்க

பெருமானால்,

"தேவர்கோ அறியாத தேவ தேவன்

செழும்பொழில்கள் பயந்துகாத் தழிக்கும் மற்றை மூவர்கோ னாய்நின்ற முதல்வன் மூர்த்தி”

வாசகப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/175&oldid=1592908" இலிருந்து மீள்விக்கப்பட்டது