உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* தமிழர் மதம்

151

என்று திருவாசக மாமறையிலும் எடுத்தருளிச் செய்யப் பட்டமை கண்டுகொள்க. மக்களாகிய நமக்குள்ளும் ஒருவர் ஒருவரின் மேற்பட்ட அறிவும் ஆற்றலும் இயற்கையே பெற்றவர் களாய், ஏனையோரைத் தஞ் சொல்வழி நிறுத்தி உலகியலை நடைபெறச் செய்யவல்ல தலைவர்கள் இருத்தல் போல, மேலுலகங்களிலுள்ள சிறந்த உயிர்களாகிய தேவர்களுள்ளும் அறிவாற்றலில் நனிசிறந்த தலைவர் சிலர் உளர் என்பதூஉம், அவர் எல்லாம்வல்ல முழுமுதற் கடவுளின் அறிவுப் பேரொளி யினால் உந்தப் பெற்று உலகங்களை ஆக்குதலுங் காத்தலும் அழித்தலு மாகிய வினைகளை நடத்துவர் என்பதூஉம் இயற்கை நூற்புலமை யிலும் அறிவுநூற் புலமையிலுந் தலைசிறந்து விளங்கிய ஸர் ஆலிவர் லாட்ஜ்4 என்னும் ஆங்கில ஆசிரியராலும் நன்கெடுத்துக் காட்டப்பட்டிருக்கின்றது.

இங்ஙனமாக

15

மேலுலகங்களிற் சிறந்த தேவர்களிலுஞ் சிறந்தாராய் அறிவாற்றல்கள் இயற்கையே மிகுதியாய் வாய்க்கப் பெற்று இறைவன்றன் அறிவொளியை நேரே ஏற்று முத் தொழில் புரிவாரை நான்முகன், திருமால், உருத்திரன் எனப் பழைய சான்றோர்கள் கூறாநிற்பர். எனவே, எல்லாம்வல்ல முழு முதற்கடவுள் தான் ஏதொரு செயலுஞ் செய்யாதிருக்க, அவனது அறிவொளியால் உந்தப்படுந் தேவர்களே படைத்தல் காத்தல் அழித்தல் முதலான வினைகளைச் செய்யாநிற்ப ரென்னும் உண்மை,

“தோற்றுவித் தளித்துப் பின்னுந்

துடைத்தருள் தொழில்கள் மூன்றும்

போற்றவே யுடையன் ஈசன்

புகுந்தது விகார மென்னிற்

சாற்றிய கதிரோன் நிற்கத்

தாமரை யலருங் காந்தங்

காற்றிடுங் கனலை நீருங்

கரந்திடுங் காசி னிக்கே

என்றும்,

“உரைத்த இத் தொழில்கள் மூன்றும்,

மூவருக் ருலக மோத

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/176&oldid=1592909" இலிருந்து மீள்விக்கப்பட்டது