உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152

மறைமலையம் - 31

வரைத்தொரு வனுக்கே யாக்கி

வைத்ததிங் கென்னை யென்னின்

விரைக்கம லத்தோன் மாலும்

ஏவலான் மேவி னோர்கள்

புரைத்ததி கார சத்தி

புண்ணிய நண்ண லாலே'

என்றும்,

"சிவன்உரு அருவும் அல்லன்

சித்தனோ டசித்தும் அல்லன்

பவம்முதற் றொழில்க ளொன்றும்

பண்ணிடு வானும் அல்லன்

தவமுத லியோக போகந்

தரிப்பவன் அல்லன் றானே

இவைபெற இயைந்தும் ஒன்றும்

இயைந்திடா இயல்பி னானே

என்றும் அருணந்திசிவனார் தமது சிவஞான சித்தியாரில் அருளிச் செய்தவாற்றாலும் நன்கு விளங்காநிற்கும் என்றித் துணையுங் கூறியவாற்றால், இற்றைக்கு ஐயாயிர ஆண்டுகட்கு முன்னமே நம் தமிழ் முன்னோர் கண்ட கடவுட்கொள்கையைத் தழீஇ ஆசிரியர் தொல்காப்பியனார் அருளிச்செய்த,

66

'வினையின் நீங்கி விளங்கிய அறிவின் முனைவன் கண்டது முதல்நூல் ஆகும்"

என்னும் நூற்பாவிலுள்ள முழுமுதற் கடவுளிலக்கணத்தின் நுட்பந் தெற்றென விளங்கற்பாலதேயாம். தொல் காப்பியனார் அருளிச் செய்தவாறே தெய்வப் புலமைத் திருவள்ளுவனாரும்,

“கற்றதனால் ஆய பயன்என்கொல் வால்அறிவன் நற்றாள் தொழாஅ ரெனின்”

(குறள் 2)

என்னுந் திருக்குறளிற் கடவுள் வால் அறிவன் என்று முழு முதற் கடவுளிலக்கணத்தை நன்கறிய வைத்தமையும், 'வால் அறிவன்’ என்னுஞ் சொற்றொடரும் ‘விளங்கிய அறிவனன்' என்னுஞ்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/177&oldid=1592910" இலிருந்து மீள்விக்கப்பட்டது