உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழர் மதம்

153

சொற்றொடரும் ஒரே பொருள் தந்து நிற்றலும் நினைவிற் பதிக்கற்பாலனவாகும். இன்னுந் தொல் காப்பியர் இறைவன் வினையின் நீங்கியவன் என்று ரைத்தவாறே திருவள்ளுவரும்,

"வேண்டுதல்வேண் டாமை இலான்அடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல

وو

(குறள் 4)

என்னுந் திருக்குறளில் இறைவன் ஒன்றைவிரும்பிச் செய்தலாகிய னையும் பிறிதொன்றை வெறுத்து அழித்த லாகிய வினையும் ல்லாதவன் என்று வலியுறுத்துரைத்தார். ஆக்குதலும் அழித்தலுங் கூறவே இடைப்பட்ட காத்தலும் அதன்கண்ணே அடங்கும்.

.

இங்ஙனம் அறிவொளி வடிவாய் நிற்கும் இறைவன் செயலற்றவனாயினும், அறிவும் நினைவும் அருளும் அற்றவன் அல்லன். அறிவும் நினைவும் அருளும் ஒன்றோ டொன்று நெருங்கிய தொடர்புடையனவாகும். அறிவில்லா தவன் நினைவும் அருளும் உடையவன் ஆகான். இம் மூன்றையும் இம் மூன்றால் வரும் இன்பத்தையும் ஒருங் குடையவன், அறிவும் நினைவும் அருளும் இன்பமும் இல்லாமல் அறியாமையில் துன்புறும் மக்களாகிய நமக்கும் ஏனைச் சிற்றுயிர்களுக்கும் அறிவும் நினைவும் அருளும் இன்பமும் உண்டாகவும் அறியாமையும் அதனால் வருந் துன்பமும் அகலவுமே கருதுவன். அறிவுடையானிடத்தே அறிவிலா னொருவன் இடையறாது பழகி வருவனாயின், நாட் செல்லச் செல்ல இவனும் அறிவுடை யனாதல் திண்ணம். இங்ஙனமே நல்ல குணங்கள் உடையவ ரோடு நெருங்கி நெடு கப் பழகுவோர் தாமும் நல்ல குணம் உடையராதலுந், தீய குணங்கள் உடையவரோடு நெருங்கி நெடுகப் பழகு வோர் தாமுந் தீய குணம் உடையராதலும் நாம் நமதுயிர் வாழ்க்கை யில் எங்குங் கண்டு வருகின்றனம் அல்லமோ? மக்களாகிய நாமும் நம்மினுங் கீழ்ப்பட்ட சிற்றுயிர் களும் இவ்வாறு தாந்தாஞ் சார்ந்த உயிர்களின் தன்மைகளையுந் தாந்தாஞ் சார்ந்த பொருள்களின் தன்மைளுகளையும் அடையப் பெறுதல் இஞ்ஞான்றை உயிர்நூல் வல்லாராலும் நன்கா ராய்ந்து காட்டப்பட்டிருக்கின்றது. இற்றைக்கு இரண்டாயிர ஆண்டுகளுக்கு முன்னமே திருவள்ளுவ

16

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/178&oldid=1592911" இலிருந்து மீள்விக்கப்பட்டது