உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154

நாயனார்,

மறைமலையம் - 31

“நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க் கினத்தியல்ப தாகு மறிவு’

(குறள் 452)

என்னுந் திருக்குறளில் இவ்வுண்மையினை நன்கு விளக்கிக் காட்டி யிருக்கின்றார். என்பில்லாத பச்சிலைப் புழுவுந் தான் சார்ந்திருக்கும் பச்சிலையின் நிறத்தைப் பெற்றுப் பச்சென் றிருக்குமாயின், இறைவன் அருளாற் சிறிது சிறிதே இவ்வுடம் பின் வாயிலாக அறிவு விளங்கப் பெற்று வரும் நாமும் இறை வன்றன் அறிவொளியினையே முழுதுஞ் சார்ந்து நிற்பமாயின் அவ்வறிவொளியினை நாமும் முற்றும் பெறுதல் திண்ண

மன்றோ?

அஃதுண்மையே யென்றாலும், இறைவ னறிவொளி யினைச் சார்ந்தவளவானே நாம் அவ்வொளியினைப் பெறுதல் திண்ணமாயின், எல்லாம் நஞ்செயலாகவே முடிகின்றதன்றி,

றைவன் நமக்குச் செய்வதொன்றும் இல்லையாய் முடிகின்றதாலோவெனின்; அற்றன்று. இறைவன் தனக்குரிய அறிவொளியினை உயிர்களும் பெறல் வேண்டுமெனக் கருதியபடியாயே யிருப்பன். அவன் அங்ஙனங் கருதியபடியாய் இருத்தலால், அவன்றன் அறிவொளி எல்லா உயிர்களின் அறிவையும் விளக்கம் உடையதாகச் செய்தே விடும். அற்றேற், கருவிகளின் உதவியின்றி ஒரு நிகழ்ச்சியினை வெறு நினைவு மட்டாற் செய்தல்கூடுமோ வெனிற்; கூடும். ஒருவர் நினைக்கும் நினைவு தொலைவிலுள்ள வேறொருவர் உள்ளத்திற் சென்று பதிந்து தோன்றும் நிகழ்ச்சிகள் நாடோறும் பல்லாயிரக் கணக்காய் எங்கும் நடைபெறுகின்றன. இவற்றுள் ஆராய்ந்து உண்மையெனத் தெளியப்பட்ட நினைவு நிகழ்ச்சிகள் பற்பலவற்

L

உயிர்நிலை ஆராய்ச்சிக் கழகத்தார்7 தொலைவிலுணர்தல்'8 என்னுந் தலைப்பின்கீழ் விரிவாய் எடுத்துக்காட்டி யருக்கின்றனர். எட்மண்ட் கர்நி” மையர்ஸ்20 பாட்மோர்21 என்னும் ஆங்கில ஆசிரியர்கள் எழுதியிருக்கும் நூல்களையும், யாம் ஆராய்ந்து வரைந் திருக்குந் தொலைவி லுணர்தல் என்னும் நூலையும் நோக்கு வார்க்குக், கருவிகளின் உதவி வேண்டாமலே திண்ணியார் ஒருவர் நினைத்த நினைவானது தான் கருதிய பயனைத் தந்தே விடும் உண்மை

நி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/179&oldid=1592912" இலிருந்து மீள்விக்கப்பட்டது