உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* தமிழர் மதம்

155

விளங்கா தொழியாது. இது தெய்வப் புலமைத் திருவள்ளுவர், “எண்ணிய எண்ணியாங் கெய்துப எண்ணியார்

திண்ணிய ராகப் பெறின்”

என்றருளிச் செய்த திருக்குறளாலும் நன்குணரப்படும்.

(குறள் 666)

23

இன்னும், ஒருவர் எந்தப் பொருளின் உருவத்தை நினைக்கின்றனரோ அந்தப் பொருளின் நினைவுருவத்தை பாரடக்22 என்னும் மேனாட்டாசிரியர் படம் பிடித்துக் காட்டியிருக்கின்றார். ஒருவர் ஒரு பறவையின் வடிவத்தை நினைத்துக் கொண்டிருக்க, அந்நினைவுருவம் அவ்வாசிரியர் அமைத்த நுண்ணிய தட்டத்திலே பதிந்து எல்லார்க்குங் கட் புலனாக, அப்பறவையின் வடிவினைத் தோன்றக் காட்டியது. ங்ஙனமே பாரடக் ஆசிரியர் படம் பிடித்துக் காட்டிய நினைவுருவங்கள் எத்தனையோ பல. நம் போன்ற மக்களாகிய சிற்றுயிர்களின் எண்ணங்களும் நினைவு களுமே தாந்தம் எண்ணியவைகளையும் நினைந்தவைகளை யும் எவ்வகையான கருவியின் உதவியும் வேண்டாமல் தாமே செய்து முடிக்க வல்லனவாய் இருக்குமாயின், வரம்பற்ற ஆற்றல்மிக்க இயற்கை யறிவினனான இறைவன் எத்தகைய கருவியினுதவியும் வேண்டாமலே தான் எண்ணியவற்றை எண்ணியவாறே செய்து முடிக்க மாட்டுவான் என்பதனை யாம் எடுத்துச் சொல்லுதலும் வேண்டுமோ! ஆகவே, இறைவன் நினைவளவினாலேயே யாவுஞ் செய்ய மாட்டுவான் என்னும் அரும்பேருண்மையினை நந் தமிழ் முதுமக்கள் பல்லாயிர ஆண்டுகளுக்கு முன்னமே கண்டறிந்தாற் போல, ஏனையோர் கண்டிலரென்பதும் நினைவிற் பதிக்கற்பாற்று.

அற்றேல், உயிர்களெல்லாந் தொன்றுதொட்டே இறைவ னறிவொளியிலன்றி வேறெதன்கண்ணுங் வைகுதல் இல்லாமை யால், அவைகள் இன்னும் அவ்வறிவொளியினை முற்றும் பெறாதவா றென்னையெனின்; பகலவனொளி எங்கும் பரவி எக்காலும் விளங்குவது; அதனொளி வெள்ளத்திலேயே நாம் வைகும் இம்மாநில மாகிய பந்து மிதக்கின்றது; அங்ஙன மிருந்தும் பகலவன்னொளியில்லாத இராப்பொழுதும், அவனொளி விளங்கும் பகற்பொழுதும் மாறிமாறி வருதல் என்னை? என்று சிறிது நோக்குவோ மாயின், எக்காலும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/180&oldid=1592913" இலிருந்து மீள்விக்கப்பட்டது