உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156

மறைமலையம் - 31

எவ்விடத்துந் விளங்கும் இறைவ னொளியிலேயே நாம் முழுகிக் கிடந்தும் ஒருகால் அவ் வொளியினைப் பெறாது அறியாமை யிருளிற் புதைந்தும், பிறிதொருகால் அவ்வொளியினைப் பெற்று அறிவு விளங்கியும் நாம் மாறிமாறி நிற்கும் நிலையின் உண்மை புலனாகிவிடும். இந்நிலை உருண்டையானது பகலவ னொளி வெள்ளத்தில் தன்னைத்தானே சுற்றிய படியாய்ப் பகல வனைச் சூழ்ந்து சுழன்று செல்கின்றது; இந்நிலவுருண் டையின் மேற்பரப்பின் எந்தப் பக்கம் பகலவன் முகமாய்த் திரும்பு கின்றதோ அந்தப் பக்கம் மட்டுமே அப்போது பகலவன் ஒளியைப்பெற்றுத் திகழ் கின்றது; பகலவன் முகமாய்த் திரும்பாத அதன் மற்றைப் பக்கங்கள் அப்போது இருள்மிகுந்து இராப் பொழுது வாய்ந்தனவாய்ச் செல் கின்றன; நாடோறும்; நாங்காணும் இவ்விருவகை நிகழ்ச்சி களைப் போலவே, இறைவன்றன் அறிவொளி முகமாய்த் திரும்பும் பேரன்பர்கள் அவன்றன் அறி வொளியைப் பெற்று விளங்கா நிற்ப, அவ்வொளி முகமாய்த் திரும்பாத சிற்றுயிர்களோ அறியாமை யால் விழுங்கப்பட்டுப் பிறவி வட்டத்திற் கிடந்து சுழன்று சுழன்று துன்புறா நிற்கின்றன என்க. எனவே, இறைவன் தனது அறிவொளியை எல்லா வுயிர்க்கும் வழங்குதலில் என்றுங் கருத்துடைய னாயிருத்தல் போலவே, சிற்றுயிர்களாகிய நாமும் அவன்றன் அறிவொளியை நோக்குங் கருத்துடையராய் என்றும் நிற்பினல்லது அவ்வொளியிற் றோய்ந்து அதன்கட் டோன்றும் பெயராப் பேரின்பத்தினை நுகர்தல் இயலாது. மக்களாகிய நமக்கும், நம்மினுந் தாழ்ந்த சிற்றுயிர் களுக்குந் தமக்கு நன்மையாவ திதுவென அறியும் அறிவும் அந் நன்மையைப் பெறும் முயற்சியும் இயற்கையே பொருந்தி யுள்ளன. ஆகவே, அவ்வறிவையும் முயற்சியையும் எந்த வுயிர் பயன்படுத்தவில்லையோ, அவை யிரண்டையும் பயன்படுத்தி எந்தவுயிர் இறைவன்றன் அறிவொளியைப் பெற வில்லை யோ அவ்வுயிர் தன்னுடைய அறிவாற்றலும் ஆள்வினை யாற்றலுங் குன்றி வரவர அறியாமையாற் கவரப்பட்டுத் துன்புறாநிற்கும். எல்லா உயிரும் அறிவும் முயற்சியும் வாய்ந்தவனவாய் இயங்குதலும், அவ்வறிவையும் முயற்சி யையும் பயன்படுத்தும் உயிர்கள் மேன்மேல் அறிவும் இன்பமும் பெருகப் பெறுதலும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/181&oldid=1592914" இலிருந்து மீள்விக்கப்பட்டது