உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

  • தமிழர் மதம்

மேலும்

161

ப்

நிலையும் ஒருங்குடைமையின் அருவுருவ நிலையும் வாய்ந்ததாய் நிற்குந் தனிப்பேருண்மை அறிஞரனைவரும் நினைவிற் பசுமரத்தாணிபோற் பதித்துக்கொளற் பாலார். எனவே, காற்று அருவமாயே நிற்றலானும், நீரும் நிலனும் உருவமாயே நிற்றலானும், வை மூன்றும் ஒளியுடைப் பொருள்களாய் விளங்காமையானும், எல்லையற்ற பேரொளியினனான முதல்வன் தன்னையொப்ப அருவாயும் உருவாயும் அருவுருவாயும் பெருகொளி மருவி யொளிருந் தீவடிவின் மட்மே இயல்பாக விளங்கித் தோன்றுவனல்லது, ஏனைக் காற்றினும் நீரினும் நிலத்தினும் விளங்கித் தோன்றுவானல்ல னென்பது கடைப்பிடித்துணர்தல் வேண்டும். தீவடிவே இறைவன் வடிவென்னும் உண்மையைத் தமிழ்ச் சான்றோரே முதன்முதற் கண்டறிந்தவரென்பதற்குச், சுடர்கின்ற கோலந் தீயேயென மன்னு சிற்றம்பலவர்” என்று சைவசமய முதலாசிரியராகிய மாணிக்கவாசகப் பெருமான் வலியுறுத்தி அருளிச் செய்தவாறு போலவே, அவர்க்குப்பின் வந்த ஏனைச் சைவ சமயாசிரியரும், மெய்கண்ட தேவர் முதலான சைவசித்தாந்த ஆசிரியரும் பிறருமெல்லாம் ஒரு காலன்றிப் பலகாலும் பற்பல இடங்களிலும் அடுத்தடுத்து ஓதுமாற்றால் நன்கு விளங்காநிற்கும். அவற்றின் விரிவெல்லாம் எமது மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும் என்னும் நூலிற் கண்டுகொள்க. இன்னுந் தீயின்றமையும் இறைவன் றன்மையும் எல்லா வகையாலும் ஒத்துநிற்றலும், அந் நூலிலும் எம்முடைய திருவாசக விரிவுரையிலுஞ் சைவ சித்தாந்த ஞானபோதத் திலும் அங்ஙனமே விரிவாயெடுத்து விளக்கப் பட்டிருக்கின்றது. எனவே, ஒளிவடிவே கடவுள் வடிவு எனக்கொண்டார் பண்டுதொட்டு இன்றுகாறு முள்ள நந் தமிழாசிரியர் எல்லாம் என்பதை எல்லாருங் கருத்திற் பதித்துக் கொள்ளல் வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/186&oldid=1592919" இலிருந்து மீள்விக்கப்பட்டது