உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162

20. ஒளிவு வடிவு சிவமும் உமையும்

இனி, ஒளிவடிவை உற்று நோக்குவோமாயின், அது சிவந்த நிறம் அல்லது பொன்னிறம் உடையதாயும், அந்நிறத்தின்கண்ணே அடங்கிய ஒரு சிறு நீலநிறமும் உடன் கூடியதாயும் இருத்தலை அறிந்து கொள்ளலாம். தீயின் றன்மை கடுந்தன்மையேயாகும்; தீயின் நிறமுஞ் சிவந்த நிறமேயாகும்; அத் தீயின்கண் அடங்கிய நீரின்றன்மையோ குளிர்ந்த தன்மை யாகும்; அந்நீரின் நிறமோ நீலநிற மாகும். மேலும், வன்றன்மை யுடைய தீ ஆண்டன்மையது என்றும் மென்றன்மையுடைய நீர் பெண்டன்மையது என்றும் பகுத்துணர்ந்து கொள்ளல் வேண்டும். ஆனதனாற்றான், வன்றன்மையுஞ் சிவந்த நிறமும் வேண்டும்.ஆனதனாற்றா உடையவன் சிவபிரான் என்றும், மென்றன்மையும் நீலநிறமும் உடையவள் உமைப்பிராட்டியென்றுந் தமிழ் நூல்களெல்லாம் ஒத்து ஒருமுகமாய் உரைக்கின்றன. அவ்வுண்மைக்குச் “சிவனெனு நாமந் தனக்கே யுடைய செம்மேனி எம்மான்” என்னும் அப்பர் திருமொழியும், "நீல மேனி வாலிழை” என்னும் பழைய ஐங்குறு நூற்றுச் செய்யுட் சொற்றொடருமே உறுபெருஞ் சான்றாம் என்க. சிவன் என்னுஞ் சொல் முருகப் பிரான் பெயராகப் பண்டைத் தொல்காப்பிய நூலுள் ஓதப்பட்ட சேயோன் என்னுஞ் சொல்லின் திரிபேயாகும்

இனி, இற்றைக்கு ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகட்கு முற்பட்ட பழைய பத்துப்பாட்டு எட்டுத்தொகை முதலிய நூல்களிலாதல், அவற்றிற்கும் முற்பட்ட தொல்காப்பிய நூலிலாதல் சிவன் என்னும் பெயர்ச்சொற் காணப்

ாமையின், அது தென்னாட்டிலிருந்த பண்டைத் தமிழ்ச் சான்றோர் வழங்கிய சொல்லன்றென்பது அங்கையங்கனி போல் நன்கு விளங்கா நிற்கும். அஃதங்ஙனந் தமிழ்ச் சான்றோர் வழங்கிய சொல் அன்றாயிற், பின் அது வந்த வரலாறுதான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/187&oldid=1592920" இலிருந்து மீள்விக்கப்பட்டது