உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* தமிழர் மதம்

163

யாதோவெனிற் கூறுதும், தமிழ்மக்கள் பண்டைக் காலத்தே, அஃதாவது சிறிதேறக் குறைய ஐயாயிர ஆண்டுகளுக்கு முன்னமே இவ்விந்திய நாடெங்கும், அஃதாவது வடக்கே பனிமலை முதல் தெற்கே குமரியாறு வரையிலும், இன்னும் இ விந்திய நாட்டுக்குப் புறம்பே யுள்ள மேல் கீழ் நாடுகளிலும் பரவி யிருந்தோராவர் என்னும் உண்மை நடுநிலைவழா வெள்ளைக்கார ஆசிரியர்களால் மிகச்சிறந்த சான்றுகள் கொண்டு நன்குவிளக்கிக் காட்டப்பட்டு வருகின்றது. தமிழுக்குந் தமிழ் மக்கள் நாகரிகத்திற்குந் தொன்மை கூற ஒருப்படாத பார்ப்பனரும் அவர் வழிச் சார்ந்தாருங்கூட அது கண்டு தமிழரின் பண்டைச் சிறப்பினை ஒப்புக்கொண்டு கூற முன் வந்திருக்கின்றனர். ஆதலால், தமிழ்மக்கள் பண்டை நாளில், ஆரியர் இந்திய நாட்டுட் புகும் முன்னமே வடமேற்கே சிந்தியாறு பாயும் பஞ்சாபு மாகாணம் வரையிலும் பரவி, நாடு நகரங்களும் மலையரண்களும் வகுத்து நாகரிகத்திற்றலை சிறந்து வாழ்ந்து வந்தனரென்னும் வ எமதுரை சிறிதும் ஐயுறற்பாலதன்றென்பது நினைவிற் பதிக்கற் பாற்று. அங்ஙனம் ஆரியர் வருதற்கு முன்னமே பஞ்சாப் மாகாணத்திற் சிறந்துயிர்வாழ்ந்த பண்டைத் தமிழ் மக்களின் அழிந்துபட்ட நகர்களாகிய ‘அரப்பா' 'மொகிஞ்சதரோ' என்பவைகளை அகழ்ந்தெடுத்த ஆங்கில ஆசிரியர்கள், அகழ்ந்தெடுத்த அரும்பொருள்களுட் சிவபிரான் றிருவுருக் களுஞ் சிவலிங்கத் திருவுருக்களும் மிகுதியா யிருத்தலைக் குறிப்பிட்டுச், சிவபிரானை வழிபடுஞ் சைவசமயமானது பண்டைத் தமிழ் மக்கட்கேயுரிய தாதலுடன் அதுவே உலகத்திலுள்ள எல்லாச் சமயங் களினும் மிக்க பழமை யுடையதாகவுங் காணப் படுகின்றது என இவ் வரும்பே ருண்மையினை ஒளியாமல் திறந்து சொல்லியிருக்கின்றனர். ஆதலாற், சிவன் என்னும் பெயர் இவ்விந்திய நாட்டின் வடமேற்கே யிருந்த பண்டைத் தமிழ் மக்களால் ஐயாயிர ஆண்டுகட்கு முன்னமே ஆக்கப்பட்டு எல்லாம் வல்ல முழுமுதற் கடவுளுக்குரிய சிறப்புப்பெயராக வழங்கப்பட்ட பான்மை தெளியற்பாற்று.

1

ஆரியர் வருதற்கு முன்னமே சிவன் என்னுஞ் சொல் முழுமுதற் கடவுளுக்குச் சிறப்புப் பெயராகப் பழந்தமிழ் மக்களால் வழங்கப்பட்டு வந்தமையாலன்றே, பெரும் பாலும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/188&oldid=1592921" இலிருந்து மீள்விக்கப்பட்டது