உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164

கி.பி.முதல்

மறைமலையம் - 31

ஆரியர் கொணர்ந்த சிறுதெய்வப் பாட்டுகளுஞ் சிறுபான்மை தமிழ்ச் சான்றோர் இறைவனாகிய உருத்திரன் தீக்கடவுள் பகலவன்மேல் ஆரியமொழியிற் பாடி வைத்த பாட்டுகளும் ஒருங்கு விரவிய இருக்கு வேதத்தில் “ஏபி: சிவ”(10 19, 9) எனச் சிவன் என்னும் பெயர் காணப்படுவ தாயிற்று. ஆரிய மொழி நூல்களில் இருக்கு வேதமே மிகப் பழமையானதென்னுங் கொள்கை ஆராய்ச்சி வல்ல இஞ்ஞான்றை ஆசிரியர் (10, 92, 9) எல்லார்க்கும் ஒப்பமுடிந்த தொன்றாகலின், அதன்கட் போந்த சிவன் எனுஞ் சொல்லும் அந்நூலுக்கும் முந்திய தென்பதூந் தானே போதரும். எனவே, இவ்விந்திய நாட்டின் வடமேற் கெல்லையில் உயிர் வாழ்ந்த பண்டைத் தமிழ்ச் சான்றோர் தாம் வணங்கிய முழுமுதற் கடவுளுக்குச் சிறப்புப் பெயராக இட்டு வழங்கிய சிவன் என்னும் பெயரே, பின்னர் ஆரிய வேதங்களிலும் அவற்றிற்குப் பின்வந்த ஆரிய மொழி நூல்களிலும் பையப் பைய நுழைந்து, கி.பி. முதல் நூற்றாண்டிற்குப்பின் வட நாட்டிலிருந்து தொகுதி தொகுதியாய்த் தமிழ்நாட்டிற் குடி புகுந்து வைகிய திராவிட ஆரியரிற் சிவபிரான் வழிபாட்டில் உறைத்துநின்ற சைவசமயத்தவர் வாயிலாகத் தென்றமிழ் நாட்டிற் பரவி வழங்கித் தமிழ் நூல்களிலும் புகுந்து நிலைபெறலாயிற்று. வடுக நாட்டிலிருந்து போந்து பாண்டி நாட்டிற் குடியேறிய மாணிக்கவாசகப் பெரு மானின் குடும்பத் தார் திராவிட ஆரிய அந்தணரிற் சிவ நெறி கடைப்பிடித் தொழுகிய சைவமரபின ரென்பதும், அக் குடும்பத்தவர்க்கு மணிக்கலனாய் விளங்கிய மாணிக்க வாசகரே தாங் கொணர்ந்த சிவன் எனும் பெயரைத் தாம் அருளிச் செய்த திருவாசகம், திருச்சிற்றம்பலக் கோவையார் என்னும் ஒப்புயர்வில்லாத் தனித்தமிழ் மாமறைகளின் வாயிலாக இத்தென்றமிழ் நாட்டிற்கு வழங்கிய வள்ளலுஞ் சைவசமய முதலாசிரியரும் ஆவரென்பதும் ஆராய்ச்சியாற் புலனாகின்றன. ஆகவே, சிவன் எனுஞ் சொல் வடக்கிருந்து போந்து இத்தென்றமிழ் நாட்டில் வைகிய சைவசமயப் பெரியாரால் வழங்கவிடப்பட்ட உண்மை நினைவிற் பதிக்கற்பாற்று.

-

த்

அங்ஙனமாயின், இத் தென்றமிழ் நாட்டில் உயிர் வாழ்ந்த பண்டைத் தமிழாசிரியர் தாம் வணங்கிப் போந்த முழுமுதற் கடவுளுக்கு இட்டு வழங்கிய சொல் யாதோ வெனிற், கூறுதும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/189&oldid=1592922" இலிருந்து மீள்விக்கப்பட்டது