உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

L

தமிழர் மதம்

165

இப்போது கிடைத்திருக்கும் பழந்தமிழ் நூல்களுள் மிகப் பழையது தொல்காப்பியம் ஒன்றே யாகும். அதன்கட் கூறப்பட்ட கடவுட் பெயர்கள் 'சேயோன்,' 'மாயோன், 'கொற்றவை' என்பவைகளே யாகும்; சேயோன் என்பது சிவந்த நிறத்தினனான முருகப் பிரானைக் குறிக்கின்றது; மாயோன் என்பது கரிய அல்லது நீல நிறத்தினனான திருமாலைக் குறிக்கின்றது; கொற்றவை என்பது வெற்றிபெற்ற திரிபுரசுந்தரி அல்லது முப்புரம் எரி செய்த அம்மையைக் குறிக்கின்றது; கொற்றம் என்னுஞ் சொல் வெற்றியைக் குறிக்கும். திரிபுரம் எரித்த அம்மை யைக் கொற்றவை என்று தொல்காப்பியங் கூறினமையால், அவ்வம்மையை ஒருபாலுடையனாய்த் திரிபுரம் எரித்த அப்பனுக்குக் 'கொற்றன்' என்னும் பெயரும், அக் காலத்தே வழங்கப்பட்டமை உய்த்துணரப்படும். அதனாலன்றே காற்றன்' என்னுஞ் சொல் தொல்காப்பிய உரையாசிரியரில் மிகப் பழையரான இளம்பூரணர் உரையிற் பலவிடங்களிலும் எடுத்துக் காட்டப்பட்டிருக் கின்றது.

இனித், தொல்காப்பியத்திற்கு அடுத்தபடியிற் பழமை யானதுங், குமரிநாட்டில் ஓடிய பஃறுளியாறு கடல்வாய்ப்படு முன் இயற்றப்பட்டதுமான

“வடாஅது பனிபடு நெடுவரை வடக்குந் தெனா அ துருகெழு குமரியின் றெற்கும்"

என்னுங் காரிகிழாரது புறப்பாட்டிற் “பணியிய ரத்தைநின் குடையே முனிவர்

முக்கட் செல்வர் நகர்வலஞ் செயற்கே”

எனச் சிவபெருமான் முக்கட்செல்வர் என்று நுவலப் படுகின்றனன், இச்செய்யுள் ஐயாயிர ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்ட தொன்றாகலின் இதன்கண் நுவலப் பட்ட முக்கண்ணான் என்னுஞ் சொல் பண்டைத் தமிழ் மக்களால் முழுமுதற் கடவுளுக்குச் சிறப்புப் பெயராக வைத்து வழங்கப் பட்டமை நன்கு தெளியப்படும். இச்செய்யுள் இயற்றப்பட்ட காலத்தில் தமிழ்மக்களும் அவர் வழங்கிய தமிழ் மொழியும் வடக்கே பனிமலையாகிய இமயம் வரையிற் பரவி யிருந்தமை ‘வடாஅது பனிபடு நெடுவரை வடக்கும்” என்னும் இதன்

66

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/190&oldid=1592923" இலிருந்து மீள்விக்கப்பட்டது