உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166

மறைமலையம் - 31

முதலடியாற் புலனாகின்றது; அதுவேயுமன்றி, அந்நாளிற் சிவபிரானுக்குத் திருக்கோயில் இருந்தமையும் இதனாற் பெறப்படுகின்றது. இன்னும், பெருங்கடுங்கோன் என்னும் பழைய நல்லிசைப் புலவர் பாடிய பாலைக்கலியின்

முதற்பாட்டின்கண்,

"முக்கண்ணான் மூவெயிலும்,

உடன்றக்கால் முகம்போல ஒண்கதிர் தெறுதலின்”

என ‘முக்கண்ணான்' என்னும் பெயர் சிவபெருமானுக்குச் சிறப்புப் பெயராக ஓதப்படுதலும், அவன் முப்புரம் எரித்த வரலாறு கூறப்படுதலும் நினைவிற் பதிக்கற்பாற்று.

னி ‘முக்கண்ணான்' என்னும் பெயரேயன்றிச் சடையன் என்னும் பெயரும், “மணிமிடற்றண்ணல்” என்னும் பெயருஞ் சிவபிரானுக்குரியனவாகப் பண்டை நாளில் தமிழகத்தில்

வழங்கப்பட்டமை,

“இமயவில் வாங்கிய ஈர்ஞ்சடை யந்தணன்”

என்னுங் குறிஞ்சிக்கலிப்பாவின் அடியாலும், “மணிமிடற் றண்ணற்கு மதியாரற் பிறந்தோய் நீ”

என்னும் பரிபாடல் ஒன்பதாம் பாடலின் அடியாலுந் தெற்றென விளங்கா நிற்கின்றது. எனவே, முக்கண்ணான், சடை யன், மணிமிடற்றான் என்னும் பெயர்களே சிவபிரானுக்குரிய சிறப்புப் பெயர்களாகத் தென்றமிழ் நாட்டின்கட்பண்டிருந்த சான்றோர்களால் வழங்கப்பட்டமை நன்கு பெறப்படுதல் காண்க.

அற்றேல், வடநாட்டிலிருந்த

பண்டைத் தமிழர்

ருத்திரன்,’ ‘சிவன்' என்னும் பெயர்களாற் குறித்த கடவுளும், தென்னாட்டிலிருந்த பழந்தமிழாசிரியர் ‘முக்கண்ணான்,' சடையன்,’ ‘மணிமிடற்றான்' என்னும் பெயர்களாற் குறித்த கடவுளும் ஒன்றே என்பதற்குச் சான்று என்னையெனிற், காட்டுதும் மூவெயில் எரித்த அருட்செயல் முக்கண்ணான் செய்த தொன்றாகக் கலித்தொகை கூறுமாறு போலவே, உருத்திரன் மேலனவான இருக்கு வேதப் பதிகங்களுங் கூறாநிற்கின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/191&oldid=1592924" இலிருந்து மீள்விக்கப்பட்டது