உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழர் மதம்

167

“கடுந்தன்மையனான தீக்கடவுளே நீ, ஒரு வில் லாண்மை வல்லானை யொப்பவுங் கூர்ங்கொம்புவாய்ந்த ஒரு காளை யினையொப்பவும் புரங்களைப் பொடி செய்தனை” என இருக்குவேத ஆறாம்மண்டிலம் (16, 36) பகர்தல் காண்க. இப்பதிகந் தீக்கடவுள் மேலதாகக் காணப்படினும், “அக்நி, நீயே உருத்திரன்," (த்வம் அக்நே ருத்ரோ 2,1,6) என்று அவ்விருக்கு வேதமே பலவிடங்களிலும் ஓதக்காண்டலானுஞ் சைவசமய ஆசிரியரான திருநாவுக்கரசு நாயனார்,

66

'எரிபெ ருக்குவர் அவ்வெரி ஈசனது

உருவ ருக்கம தாவது உணர்கிலார்

என அருளிச் செய்தவாறு போலவே ஏனை ஆசிரியன் மாரும் அருளிச் செய்திருத்தலானுந் தீவடிவே சிவபிரான் வடி வென்பதூஉந், தீக் கடவுண் மேற்றாக கூறிய முந்நகரழிவு (திரிபுர தகனம்) சிவபிரான் தன்னடியாரைக் காக்கச்செய்த ஒரு பேரருட்செயலேயா மென்பதூஉம், அச்செயலை முக்கண்ணான் மேற்றாகக் கூறும் பழந்தமிழ் நூல்களும் உருத்திரன் மேற்றாகக் கூறும் இருக்குவேதம் முதலான பழைய வடநூல்களும் அவ்வாற்றாற் சிவபிரான் மேலதாகவே அவ்வருட் பெருஞ் சயலை எடுத்தோதின வென்பதூஉம் கடைப்பிடித் துணர்தல் வேண்டும்.

இனிச், 'சடையன்' எனும்பெயர் முக்கட்பிரானுக் குரியதாகப் பழந்தமிழ் நூல்கள் நுவலுமாறு போலவே, இருக்குவேதமும் (1, 114, 1),

"வலியோனுஞ், சடைமுடி வாய்ந்தோனும் வீரர் களுக்குத் தலைவனுமான உருத்திரனுக்கு " (இமா: ருத்ராய தவஸே கபர்திநே க்ஷயத்வீராய) என ஓதா நிற்கின்றது. இவ்விருக்கு வேதவுரையிற் போந்த “கபர்திந்” என்னுஞ் சொல் “சடையன்” என்னும் பொருளே தருவது. உருத் திரன்மேற் பாடப்பட்ட இருக்குவேதப் பதிகங்கள் பலவற்றிலும் இக் “கபர்திந்” என்னுஞ் சால் அவற்குரிய தொன்றாகவே வழங்கப்பட்டு வருதல் கொண்டுஞ், 'சடையன்' என்னுந் தமிழ்ச்சொல்லாலுங், ‘கபர்திந்' என்னும் வடசொல்லாலுங் குறிக்கப்பட்ட கடவுள் சிவபிரான் ஒருவனே என்பது வெள்ளிடை மலைபோல் விளங்காநிற்கின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/192&oldid=1592925" இலிருந்து மீள்விக்கப்பட்டது