உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168

மறைமலையம் - 31

இனி, 'மணிமிடற்றான்' என்னும் பெயர், ஒரு காலத்திற் றன் னடியவர்களைக் கொல்வான் வேண்டி எழுந்த ஒரு காடும்பாம்பின் நஞ்சைச் சிவபிரான் பருகி, அதனைத் தன் மிடற்றின்கண் அடக்கி அவர்களைத் காத்த காரணத்தால் வந்த தொன்றாகும். அந்நஞ்சு தங்கிய அவனது கழுத்து நீலமணி பதித்ததுபோற் றோன் றியதாகலின் அவன் அதுபற்றித் தமிழில் 'மணிமிடற்றான்' எனவும், வடநூல்களில் ‘நீலகண்டன்' எனவும் வழங்கப் படுவானாயினன். இறைவன் இங்ஙனம் நஞ்சைப் பருகித் தன்னை அடைக்கலம்புக்க தேவர்களைக் காத்த வரலாறு இருக்குவேதப் பத்தாம் மண்டிலத்தின்கண் (12 6),

சடை

“நீண்ட களையுடை யவன், ஓர் உருத்திரன் கொணர்ந்த பரிகலத்திலிருந்த நஞ்சைப் பருகினான்” (கேஸி விஷஸ்ய பாத்ரேண யத் ருத்ரேணாபிபத் ஸக), என்று நுவலப்படுதல் காண்க.

இன்னும் இங்ஙனமே முக்கண்ணான் செய்தனவாகத் தமிழ்நூல்கள் புகலும் அருட்பெருஞ்

செயல்களும்,

ருத்திரனுஞ் சிவபெருமானுஞ் செய்தனவாக வட நூல்கள் எடுத்துரைக்கும் பேரருட் செயல்களும் எல்லா வாற்றாலும் ஒருங்கொத்து நிற்றலின், முக்கண்ணான், சடையன்' 'மணிமிடற்றான்' என்னுந் தமிழ்நூற்பெயர் களாலும் ‘உருத்திரன்’ 'சிவன்' என்னும் வடநூற்பெயர் களாலும் குறிப்பிடப்பட்ட முழுமுதற் கடவுள் சிவபெரு மான் ஒருவனே யென்பது அங்கையங்கனிபோல் நன்கு விளங்காநிற்குமென்க.

அற்றேல், எல்லாம்வல்ல இறைவனுக்குப் பழைய தமிழ்நூல்களிலும் வடநூல்களிலும் வழங்கிய முக்கண் ணான் உருத்திரன் முதலான பலபெயர்கள் இருக்க, அவற்றுள் ஒன்றான சிவன் என்னும் பெயர்மட்டும் ஏனைப் பெயர்கள் எல்லாவற்றினுஞ் சிறந்ததாக எடுக்கப்பட்டு முதல்வனுக்கு வழங்கலானதும், அப்பெயரின் வழியே முழுமுதற்கடவுளை வழிபடுந் தமிழரது கொள்கை அல்லது மதம் ‘சைவம்’ எனப் பெயர் பெறலானதும் என்னை யெனின்; சிவன் என்னுஞ் சொல்லே ஏனை யெல்லாவற்றி னும் மிக்க பழமையுடைய தான்றென்பது. மற்றைப் பண்டை மக்களிற் பலர் அச்சொல்லையே இறைவனுக்குச் சிறந்த பெயராக வைத்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/193&oldid=1592926" இலிருந்து மீள்விக்கப்பட்டது