உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழர் மதம்

7

169

வழங்கியவாற்றால் அறியப்படு கின்றது. எபிரேயர்2 தாம் வணங்கிப் போந்த கடவுளைக் 'கிகோவா'3 என்றே அழைத் தனர்; கிரேக்கர்4 அதனைச் ‘சியூஸ்’5 என்றே அழைத்தனர்; உரோமர் அதனைச் ‘சூபிதர்7 என்றே அழைத்தனர்; இவ் வயலவர் வழங்கிய அச்சொற்களெல்லாஞ் 'சிவ' என்னுஞ் சொல்லின் திரிபேயன்றி வேறல்ல. மேல் நாடுகளில் அஞ்ஞான்று வாணிகம் நடாத்திய பண்டைத் தமிழரின் வாயிலாகச் 'சிவ' என்னுஞ் சொல் அயல்நாட்டு நாகரிக மக்களிடையே பரவினாற் போற், சிவபிரானைக் குறிக்கும் ஏனைப் பெயர்ச்சொற்கள் அம் மக்களிடையே பரவக் காணாமையின், வடக்கிருந்த பழந்தமிழர் வழங்கிய 'சிவ’ என்னுஞ் சொல்லே ஏனையெல்லாவற்றினும் மிக்க பழமை யுடைத்தென்பது தெளியப்படா நிற்கும். அதனாற்றான், 'சிவ' என்னுஞ் சொல் தமிழர் வணங்கிய முழுமுதற் கடவுளுக்குச் சாலச் சிறந்த பெயராகவும், அவரது மதம் அச்சொல்லின் வழியே ‘சைவம்' என்னுஞ் சிறப்புப்பெயருடையதாகவும் வழங்கி நிலைபெறலாயின வென்று ஓர்ந்து கொள்க.

னிப், பண்டைக்காலத் தமிழர், ஒளிவடிவிற் சிவந்த நிறமுங் கடுந்தன்மையும் வாய்ந்து தோன்றிய அனலுருவை 'முக்கண்ணான்’ ‘சடையன்' எனப் பெயர் வைத்து வணங்கிய வகையினால், முழுமுதற் கடவுளின் றிருவுருவம் நங் கட்புல னதிரே விளங்கித் திகழும் அருண் மாட்சியினையும் ஒருசிறிது விளக்கிக் காட்டுவாம். இறைவன் எங்கும் ஒளியுருவாய்த் தோன்றி நின்று நமக்குக் கண்ணறிவை விளக்கு முகத்தால் நமது மனஅறிவைக் கிளரச்செய்து, அதன்வழியே நமக்கு இன்பத்தையும் மேன்மேற் பெருக வைத்துவரும் அருட் பெருந்திறம் மேற்போந்த இந்நூற்பகுதிகளால் நன்குணரக் கிடக்கும். அதனால், இறைவன்றன் ஒளிவிளக்கம் இல்லாத இடம் எங்குமே இல்லையென்பதனை எல்லாருங் கருத்திற் பதித்துக் கொள்ளல்வேண்டும்.

L

அற்றேல், பகவலன் வெளிச்சம் இல்லாத இராக் காலத்தில் றைவன்றன் ஒளிவிளக்கம் இல்லாதுபோதல் என்னை யெனின்; அற்றன்று, இராக்காலத்தும் மதியொளி வான் மீனொளி மின்னொளி முதலான இயற்கை யொளிகள் காணப் படுதலுடன்,பல்வகை விளக்கொளியாகிய செயற்கை யொளியும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/194&oldid=1592927" இலிருந்து மீள்விக்கப்பட்டது