உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170

மறைமலையம் - 31

மக்களின் அறிவுமுயற்சியால் எங்குங் கிளர்ந்து தோன்றி மக்களும் ஏனைச் சிற்றுயிர்களும் இயங்குதற்கு உதவிபுரிகின்ற

தாகலின் இராக்காலத்தில் ஒளியே யில்லையென்று

கட்டுரைத்துச் சொல்லுதலும் அடாது. அஃதொக்கும் மக்களின் அறிவு முயற்சியாற் றோன்றுஞ் செயற்கை விளக்கொளியையும் இறைவனொளி யென்றல் ஒக்குமோவெனின், ஒக்கும்; என்னை? விளக்கொளி தோன்றுதற்கேற்ற எண்ணெய் கர்ப்பூரம் எரி கந்தகம் பஞ்சு முதலான பொருள்கள் மக்களாற் படைக்கப் பட்டன அல்ல; அவையும் அவைபோல்வன பிறவும் இறை வனொருவனாலேயே படைக்கப்பட்டனவாகும்; அவை தம்மை யெடுத்துப் பயன்படுத்தி ஒளியினை வருவித்துக் கொள்ளும் அத்துணையே மக்களின் செயலாகு மன்றி, அப்பொருள்களின் உதவியின்றி ஒளியினை யுண்டாக்குந் திறம் அவரது செயலுக்கு இல்லாமையின், அங்ஙனம் அவராற் செயற்கையாய்த் தோற்று விக்கப்படும் விளக்கொளியும் இறைவனொளியே என்றற்கு ஏதும் ஐயம் இல்லையாகலின் என்க.

இனிப், பகலவன் முகமாய்த் திரும்பாத இந்நில வுருண்டையின் ஒரு பாதிப்பக்கமே இருள் செறிந்த இராப் பாழுது வாய்ந்ததாய் இருக்கின்றதன்றி, அவன் முகமாய்த் திரும்பும் அதன் மற்றைப் பாதி அவனது பேரொளி யினைப் பெற்று விளக்கமுடையதாயே திகழ்கின்றது. இங்ஙனமே திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி முதலான ஏனையுலகங்களும் உருண்டை வடிவின வாய்ப் பகவலனைச் சுற்றி யுருண்டு செல்லுஞ் செயலினவாய் இயங்குதலின் அவைகளின் ஒரு பாதியும் எஞ்ஞான்றும் பகலவன் ஒளியில் மூழ்கி ஒளிவிளக்கம் வாய்ந்தனவாகவே வயங்கா நிற்கின்றன. இங்ஙனமாக, இவ்வுலகங்களின் மாப் பெரும் பரப்பெல்லாம் ஒளிவடிவாயே விளங்குதலுடன், பகலவனும் பகலவனைச் சூழ்ந்து செல்லும் ஏனையுலகங் களும் இயங்குதற் இட எல்லை காணப்படாமல் எங்கும் விரிந்து நிற்கும் வான்வெளியுந் தன்கண்ணே இருள் திணிந்த இடம் ஓர் அணுத்துணையுமின்றி, எங்கும் ஒரே பேரொளி தோய்ந்து பெருவிளக்கமுடையதாய் எக்காலும் விளங்கி நிற்றலையுங் கருத்தூன்றி நோக்குதல் வேண்டும். இவ்வாறு, பேரொளி வடிவாய் எல்லையின்றி எக்காலும் விளங்காநின்ற வான் வெளியின் மிக நுண்ணிய

னாய்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/195&oldid=1592928" இலிருந்து மீள்விக்கப்பட்டது