உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* தமிழர் மதம்

171

வடிவே, எங்கும் நிறைந்த முழு முதற் கடவுளின் திருவுருவ மாகுமென்பது தான் பண்டைக்

காலந் க

தொட்டுத் தமிழ்மக்கட்கே யுரிய விழுமிய கொள்கை யாய் வருதல் கடைப்பிடித்துணர்தல்வேண்டும்; இது,

"நிலன்நீர் நெருப்புயிர் நீள்விசும்பு

நிலாப்பகலோன்

புலனாய மைந்தனோ டெண்வகையாய்ப்

புணர்ந்துநின்றான்;

உலகே ழெனத்திசை பத்தெனத்தான் ஒருவனுமே

பலவாகி நின்றவா தோணோக்க மாடாமோ”

என்னுந் திருவாசகத் திருப்பாட்டாலும்,

66

தானே யிருநிலந் தாங்கிவிண் ணாய் நிற்குந் தானே சுடும்அங்கி ஞாயிறு திங்களுந்

தானே மழைபொழி தையலு மாய்நிற்குந் தானே தடவரை தண்கடற் கண்ணே'

என்னும் திருமந்திரத் திருமொழியாலும்,

“உலகமே யுருவ மாக யோனிகள் உறுப்ப தாக இலகுபே ரிச்சா ஞானக் கிரியையுட் கரண மாக அலகிலா உயிர்ப்பு லன்கட் கறிவினை யாக்கி யைந்து நலமிகு தொழில்க ளோடு நாடகம் நடிப்பன் நாதன்”

என்னுஞ் சிவஞானசித்தித் திருச்செய்யுளாலும் இனிது விளங்காநிற்கும்,

இங்ஙனமாக, நங் கட்புலனெதிரே இயங்கா நின்ற மாப் பேருலகங்களும், இவை தமக்கு இடனாய் எல்லையின்றி எங்கும் விரிந்து இலங்காநின்ற நுண்ணிய வான்வெளியும் எல்லாம் என்றும் மங்கா இலகு பேரொளியுடன் சுடர் விரிந்து துலங்கக் காண்டலால், லால், இவ் வாளியின் எல்லை யற்ற பரப்பே எல்லையின்றி எங்கும் விரவி விளங்காநின்ற இறைவன்றன் றிருவுருவமாகப் பண்டைத் தமிழராற் கருதி வழுத்தப்படுவ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/196&oldid=1592929" இலிருந்து மீள்விக்கப்பட்டது