உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172

மறைமலையம் - 31

தாயிற்று. இவ்வாறு வரம்பற்ற வான் வெளியின் ஒளிப்பரப்பு இறைவன்றன் றிருவுருவமாகக் கருதப்படவே, அவ் வான் வெளியிற்றிகழும் ஞாயிறுந், திங்களும் அத் திருவுருவத்திற்கு இரண்டு கண்களாகவும், வான் அளாவிநிற்கும் எரிமலைகளின் முகட்டிற் கிளர்ந்து தோன்றும் பேரனற்கொழுந்து, அவ் விருகண்களின் இடையே நுதலின்கட் சுடர்ந்தெரியும் நெற்றிக் கண்ணா கவுங் கருதப்படலாயின. இங்ஙனம் ஞாயிறு திங்கள் தீ என்னும், முச்சுடரும் இறைவனுக்கு மூன்று கண்களாகக் கருதப்பட்ட காரணத்தினாலேதான், பண்டைத் தமிழ கத்தில் அவன் முக்கண்ணான் என்னும் பொருள் பொதிந்த பெயரால் வழங்கப்படுவானாயினன்.

இனி, எல்லாம் வல்ல முதல்வனுக்கு எழிற்பேரொளி தோய்ந்த எல்லையில்லா இடைவெளி திருமேனியாகவே, அவ்வெளியின் கீழ்ப்பரப்பாகிய இந்நிலவுலகம் அவன்றன் றிருவடியாகவும், இந்நிலவுலகுக்கு மேல் நிவந்து காணப்படும் வான்முகடு அவனது சென்னியாகவும், அவ்வான் வெளியிற் செவ்வொளி மூழ்கிப் பரவிய முகிற்குழாம் அச் சென்னியில் மிளிருஞ் செக்கச்சிவந்த சடையாகவும், இவ் வுயர்ந்த வியத்தகு காட்சியில் உச்சிக்கண் முதன்மை யுற்றுத் தோன்றும் அந்தச் சடையினையுடைய சிவபிரான் அக் காரணத்தாற் சடையன் என்னும் பெயரினனாகவுங் கருதிப் பண்டிருந்த தமிழ்ப் பெரு றைவன் வழுத்தப் படலானமை

மக்களால் எல்லாம்வல்ல

நினைவிற் பதிக்கற்பாற்று.

இனி, இவ்வுலகங்களைக் கடந்தும், எம்போன்ற பேதைச் சிற்றுயிர்களின் அறிவைக் கடந்தும், இறைவன் தன்னை மறைத்தே நிற்பனாயின், ஏழையேம் அவனை எம் அறிவால் அறிந்தும் எங் கட்புலனாற் கண்டுங் களித்து அவனது பேரின்பத் தேறலை மாந்திப் பிறப்பிறப்புத் துன்பங்களினின்றும் விடுபட்டு வாழும் பேரின்ப வாழ்க்கை எமக்குக் கைகூடுவது எங்ஙனம்? கண்பூவாக் குழவியைக் காதலாற் றானே பரிந்தெடுத்து அதன் பசித்துன்பம் நீங்கத் தன் றிருமுலையிற் சுரந்தொழுகுந் தீம்பாலை யூட்டுந் தாயினும் பார்க்கத் தண்ணளி கெழுமி னோனாய், எல்லாம் வல்ல இறைவன் எண்ணிறந்த இவ்வுலகங் களினூடும், இவ்வுலகங்களைத் தாங்கும் இடைவெளியினூடுந் தனது அருட்பேரொளியினைக் கிளர்ந்தெழச் செய்து, தன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/197&oldid=1592930" இலிருந்து மீள்விக்கப்பட்டது