உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200

மறைமலையம் - 31

சிறந்தோரல்லாதார் எத்தகைய உருவையுங் கடவுளாக நம்பும் நீரர் ஆகலான், அவர் குரங்கு பறவை பாம்பு பல்லி மரம் முதலான எதனையுந் தெய்வங்களாக வைத்து வழிபடுவர். இவ்வியல்பினரான பேதை மக்கள் தமிழ் நாட்டில் தமிழ் மாந்தரிடையே மட்டுமல்லாமல், எல்லா நாட்டிலும் எவ்வகையான மக்களிடையிலும் அன்றும் இன்றும் உளர். ஆகையாற், கீழ்மக்களான அவர்கள் கைக் கொண்ட சிற்றுயிர் வணக்கத்தையும் பழக்க வழக்கங் களையும், அவர்களின் பக்கத்தே உறையும் மேன்மக்களுங் கைக்கொண்டவராகப் பிழைபடக் கருதி அவர்மேற் குறைகூறுதல் பகுத்தறிவுடை யார்க்குச் சிறதும் ஆகாது. மேலுங், காலவேறுபாட்டாலுஞ் சல்வக் குறைவாலும் ஒரு நாட்டிலுள்ள மேன்மக்களின் பெருமை குன்றியுங் கீழ் மக்களுள்ளும் அறிவுச் செல்வமின்றிப் பொருட்செல்வம் மட்டுமே யுடையாரின் தொகையுந் தலைமையும் மிகுந்தும் நிற்குங் காலங்களிற் கீழோர்க்குரிய சிற்றுயிர் வணக்கம் மேலோர் எழுப்பிய சிவபிரான் திருக் கோயில்களுள்ளும் பையப்பைய நுழைந்து ஆங்காங்கு நிலை பெறலாயிற்று. அதனாற், சிற்றுயிர் வணக்கந் தமிழரில் மேன் மக்களுஞ் செய்து போந்தனரென இசைத்தல் பொருந்தாது. அது நிற்க.

6

இனித், தமிழ்மேன்மக்களே, தாந்துன்புற்று நிலை கலங்கும் நேரங்களில், இறைவனை வெறும் ஒளிப்பிழம்பு வடிவில் வைத்து நினைக்க உள்ளம் ஒருப்படாமற் றமது துன்பத்தின் கொடுமையை அருகிருந்து கண்டு இரங்கி அதனைத் தீர்க்கவல்ல தந்தையுந் தாயுமாகக் கருதி வழிபட்டு ஆறுதல் உறுதற்கே பெரிதும் விரும்பா நிற்பார். அதனாற், றந்தைதாய் வடிவில் அமைத்த அம்மையப்பர் திருவுருவம் நீண்ட காலத்திற்கு முன்னமே சிவபிரான் றிருக்கோயில் களில் வைத்து வழிபாடு செய்யப்படுவதாயிற்று. என்றாலும், இவ்வம்மையப்பர் திருவுருவம் (உமாமகேசுவரம்) அமைக்கப் பட்டது, சிவலிங்கத் திருவுருவம் அமைக்கப் பட்டதற்குப் பன்னெடுங் காலம் பிற்பட்டதேயாகும். சிவலிங்க வடிவஞ் சிறிதேறக்குறைய ஏழாயிர ஆண்டுகட்கு முன்னமே அமைக்கப் பட்ட தொன்மை யுடைய தென்றும், அதற்கு ஓர் ஆயிரம் ஆண்டு பிற்பட்டுச் சிறிதேறக்குறைய ஆறாயிர ஆண்டுகட்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/225&oldid=1592959" இலிருந்து மீள்விக்கப்பட்டது