உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* தமிழர் மதம்

201

முன்னமே அம்மையப்பர் திருவுருவம் அமைக்கப்பட்டு வணங்கப்பட்ட பழமையு டையதென்றும், பண்டிருந்து அழிந்துபட்ட நகரங்களை அகழ்ந்து அவற்றின் கணிருந்த திருக்கோயிற் றிருவுருவங் களை எடுத்து வைத்துக் காட்டும் மேனாட்டாசிரியரின் அரிய பெரிய வுதவியினாலும், பண்டைத் தமிழ் நூலாராய்ச்சியினாலும் நன்கறியப் பெறுகின்றேம்.

இனித், தமிழ்ப் பழ மக்களிலேயே தந்தையைவிடத் தாய்க்கு உயர்வு கூறும் ஒரு குழுவினர் உண்டாகியபின், அம்மைக்குத் தனிக்கோயில்கள் சிவபிரான் றிருக்கோயில் களின் அகத்தும் புறத்தும் அமைக்கப்படலாயின. இதற்குக் குமரிமுனை (கன்னியாகுமரி)யிலுள்ள அம்மை திருக் கோயிலுங், கச்சி மாநகரில் (காஞ்சிபுரத்தில்) உள்ள காமக் கண்ணம்மை (காமாட்சி)யின் றிருக்கோயிலுங், காளி கட்டத்தில் (கற்கத்தாவில்) உள்ள காளியம்மை திருக்கோயிலும் பிறவுஞ் சான்றாக நிற்றல் காண்க.

க்

இனித், தெய்வத்தைப் பெண்வடிவில் வைத்து வணங்குதல் இழிவெனக் கருதும் வேறொரு கூட்டத்தார் தமிழரிற் றோன்றியபின், அம்மையே ஆண்வடிவினரான திருமாலாகத் திரிக்கப்பட்டுச் சிவபிரான் திருக்கோயிலின் உள்ளும் வெளியும் வைத்து வணங்கப்படலாயினர். திருமால் வணக்கம் உண்ட வரலாறு இந்நூலின்கண் முன்னும் விரித்து விளக்கப்பட்டது.

ான

இனிக், கிழக்கே விடியற்காலையிற் றோன்றும் ஞாயிறு இளஞ்செவ்வியுடையதாய்ச் செஞ்சுடர் விரிந்து திகழ அதன்கீழ்த் தோன்றுங் கடல்நீர் நீலமும் பசுமையுங் கலந்த நிறத்தினதாய்த் துலங்காநிற்பக் காணப்படும் மிக அழகிய காட்சி, இறைவன் எழில் கிளர் நீலத்தோகை மயின்மேற் றோன்றுங் காட்சியை ஒப்பதாயிருத்தலின் அவ்விடியற் காலையிற் சிவந்து தோன்றுங் கதிரவனே சேயோனாகவும், அக் கதிரவனுக்குக் கீழ்த் தோன்றும் நீலநிறக் கடலே அவன் ஊரும் நீலமயிலாகவுங் கருதி வழுத்தப்படலாயினவென்க. சேயோனாகிய முருகப்பிரான் விடியற் காலையிற் கிழக்கே மேலெழுந்து கதிர் விரிக்கும் இளவள ஞாயிற்றின் றிருவுருவே யாகலின், அவன் என்றும் இளையோன் எனப்பட்டான். கதிர்சாயுஞ் சாய்ங்கால வேளையில் மேற்கே காணப்படுவங் கதிரவனே, தன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/226&oldid=1592960" இலிருந்து மீள்விக்கப்பட்டது