உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202

  • மறைமலையம் - 31

கால

செவ்வொளி தோய்ந்த முகிற்குழாங்கள் வான்முகட்டின் நாற்புறத்துஞ் செக்கர்ச் சடையெனச் சிவந்து மிளிர, அம் முகிற்குழாங்களின் இடையே தோன்றும் வெள்ளிய பிறை அச்சடைக்கற்றை மேல் நிவந்து விளங்காநின்ற வெண்பிறை யென்னத் துலங்காநிற்பக், கண்ணையுங் கருத்தையும் ஒருங்கே கவருங் காட்சித்தாய்த் தோன்று நிலையிற் சிவபிரான் என வைத்து நம் பண்டைத்தமிழ் முது மக்களால் வணங்கப்படுவான் ஆயினன். காலை ஞாயிறு இளஞ் செவ்விய ளஞ் செவ்விய தாகலின் முருகவேள் எனவும் மாலைக் காலத்து ஞாயிறு முதிர்ந்த செவ்வியதாகலிற் சிவபெருமானெனவுங் கருதப்பட்டமை யின் இளமுருகன் சிவபிரானுக்கு மகனெனக் கொள்ளப் பட்டான். என்றாலுங், காலைஞாயிறும் மாலைஞாயிறுங் வேறுபாட்டால் இரண்டாகக் காணப்படினும், பொருளளவில் இரண்டும் ஒன்றேயாதல் எல்லார்க்கும் ஒப்ப முடிந்தமையின், முருகப்பிரானுஞ் சிவபிரானும் இருவராக வைத்து வணங்கப் பட்டாலும் இருவரும் ஒருவரே யென்பது ஆராய்ச்சி வல்லார்க் கெல்லாம் ஒத்த கருத்தேயாகும். இஃது அவ்விருவர்க்கும் வழங்குஞ் சேயோன் சிவன் என்னும் பெயர்களாலும் இனிது விளங்கா நிற்கின்றது. சேயோன் என்னுஞ் சொல்லுஞ் சிவந்த நிறத்தினன் என்னும் பொருளையே தருகின்றது; சிவன் என்னுஞ் சொல்லுஞ் சிவந்த நிறத்தினன் என்னும் பொருளையே தருகின்றது. எனவே, பொருளொற்றுமை யாலுஞ் சொல்லொற்றுமை யாலும் முருகனும் சிவனும் ஒரே முழுமுதற் கடவுளாதல் பெறப்பட்டமை காண்க. முருகப்பிரான் சிவபிரானுக்குப் புதல்வராகக் கொள்ளப் பட்டபின், அவரது திருவுருவமுஞ் சிவபிரான் றிருக் கோயில்களி னகத்தும் புறத்தும் வைத்து வணங்கப்படுவ தாயிற்று, திருப்பரங் குன்றம், திருவாவினன் குடி (பழனி), திருச்சீரலைவாய் (திருச்செந்தூர்), திருவேரகம் முதலியன முருகப்பிரானைத் தனிவைத்து நந்தமிழ் முன்னோர் வணங்கும் மிகப்பழைய திருக்கோயில்களாகும்.

னிச், சிவபிரானை அம்பலத்தில் ஆடுங்கூத்தனாக

வத்து வணங்குவதும் மிகப்பழைய காலத்திருந்தே

நடைபெற்றுவரும் முழுமுதற் கடவுள் வழிபாடாய் நம் பழந் தமிழ் மக்களிடையே காணப்படுகின்றது. இற்றைக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/227&oldid=1592961" இலிருந்து மீள்விக்கப்பட்டது