உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழர் மதம்

203

ஆயிரத்தெழுநூறாண்டுகட்கு முன்னமே இயற்றப்பட்ட தான சிலப்பதிகாரப் பதிகச் செய்யுளில்,

66

"அதிராச் சிறப்பின் மதுரை மூதூர்க்

கொன்றையஞ் சடைமுடி மன்றப் பொதியிலில் வெள்ளியம் பலத்து நள்ளிருட் கிடந்தேன்'

எனப் போந்த பகுதியிற் சிவபிரானும் அவன் திருநடங் குயிற்றும் வெள்ளியம்பலமும் நன்கு குறிப்பிடப்பட்டிருத் தல் காண்க. தி.பி. மூன்றாம் நூற்றாண்டின் துவக்கத்திலிருந்த மாணிக்க வாசகப் பெருமான் தில்லைப் பொன்னம்பலத்தே பேரின்பத் தனிக்கூத்தாடுஞ் சிவபிரான் மேலதாக வைத்துத் திருச் சிற்றம்பலக் கோவையார் அருளிச் செய்திருத்தல் காண்க. இன்னும் மாணிக்கவாசர்க்குப் பின்வந்த அப்பர் சம்பந்தர் சுந்தரர் முதலான சமயாசிரியரும் பிறருமெல்லாம் அம்பலக் கூத்தனை நெஞ்சம் நெக்குருகிப் பற்பல பதிகங்கள் பாடி யிருக்கின்றனர். இப்பத்தொன்பதாம் நூற்றாண்டின் இடை யிலிருந்த இராமலிங்க அடிகள் எடுத்துக் காட்டியவாறு, எல்லா உயிர்களின் நெஞ்சத் தாமரையின் அகத்தும் விளக் கொளி போல் அசைந்து கொண்டிருக்கும் அருளொளியின் இயக்கமே இறைவனது அருள் நடனமாகும். இவ்வியக்கத் தினால் உந்தப்பட்டே உந்தப்பட்டே ஓரறிவுடைய உயிர்களிலிருந்து ஆறறிவுடைய மக்கள் ஈறான ய எல்லாஉயிர்களுந் தத்தம் உடம்புகளில் நிலைபெற்று நின்று அறிவும் முயற்சியும் வாய்ந்தனவாய் வாழ்ந்து வருகின்றன. இவ்வாறு நடைபெறும் நெஞ்சத் தாமரையின் இயக்கமே எல்லா உயிர்களின் உயிர் வாழ்க்கைக்கும் இன்றியமையா விழுப்பம் உடையதாயிருத்தலை ஞ்ஞான்றை உடம்புநூல் வல்லாரும் நன்காராய்ந்து காட்டியிருக்கின்றனர். இந்நெஞ்சத் தாமரையில் நிகழுஞ் சிவபிரானது அருளொளி யின் இயக்கமே, இற்றைக்கு மூவாயிர ஆண்டுகட்கு முன்னமே வடமொழியிற் றமிழாசிரியராற் செய்து வைக்கப்பட்ட 'சாந்தோக்கியம்,' தைத்திரீயம்,’ 'பிருகதாரணியம்' முதலான பல பழைய உபநிடதங்களிலும், அவற்றின் சார்பாய்ப் பிற்றை நாளிற் றோன்றிய கைவல்யோப நிடதத்'திலும் விளக்கமாகச் சொல்லப்பட்டிருக்கின்றது. ஆகவே, உயிர்களினகத்தும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/228&oldid=1592962" இலிருந்து மீள்விக்கப்பட்டது