உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204

மறைமலையம் - 31

புறத்தும் ஓவாது நடைபெறும் இறைவனது அருளியக்க நிலை யினைப் பல்லாயிர ஆண்டுகட்கு முன்னமே தவக்காட்சியால் நுண்ணிதின் ஆராய்ந்து கண்ட தமிழ்ச் சான்றோர்கள், அம்பலத்தாடுஞ் சிவபிரானுக்கு ஒரு முதன்மையான இடந் திருக்கோயில் களினுள்ளே அமைத்து வைத்து வழிபடலாயினர். பண்டைத் தமிழரிற், றவவொழுக்கத்தில் நின்று அகக்கண் திறக்கப் பெற்றார் தொகை பெருகியபின் நிறுவப்பட்டதே அம்பலவாணர் திருவுருவமாகும். எங்ஙனமாயினும், அம்பல வாணர் திருவுருவமாகும். எங்ஙனமாயினும், அம்பலவாணர் திருவுருவ வழிபாடு தோன்றியது இற்றைக்கு மூவாயிர ஆண்டுகட்குக் குறையாதென்பது திண்ணம்.

இனித், தவவொழுக்கமும் அதனை மேற்கொண்டார் தொகையும் பெருகப்பெருக, முழுமுதற் கடவுளை ஒளிப் பிழம்பாகிய பொருள்வடிவிற் கண்டு வணங்கிப் போந்த பழந்தமிழாசிரியர், அதனை ஓசைவடிவிலுங் கண்டு வணங்கத் தலைப்பட்டார். பொருள்களைப் பற்றித் தமக் குண்டாந் தெளிவான உணர்ச்சியும், அவ்வுணர்ச்சியைத் தம்மொடு தொடர்புடையார்க்குத் தாந் தெளிவாகப் புலப்படுத்தி வைக்குந் திறமும் எல்லாம் எழுத்தோசையொடு கூடிய சொல்லின் உதவி கொண்டே நடைபெறக் காண்ட லின், எல்லாப் பொருட்கும் எல்லாவுயிர்க்கும் முதலாய் நிற்கும் எல்லாம் வல்ல இறைவனை, எல்லா எழுத்தோசை கட்கும் முதலாய் இயற்கையிலே தோன்றி ஒலியா நின்ற எழுத்தோசை ஒன்றனை ஆராய்ந்தறிந்து, அதன் கண்ணே வைத்து வழிபடத் துவங்கினார் நந்தமிழ் முன்னோர். எல்லா எழுத்தோசைகட்கும் முதலாய் இயற்கையிலே ஒலிப்பது எது? கடலோசையைக் கருத்தாய் நோக்குமின்கள்! வெள்ளிய ஒரு சங்கினை எடுத்துக் காதில் வைத்துக் கேண்மின்கள்! அவை யிரண்டிலிருந்தும் இயல்பாகக் கேட்கப்படும் ஓசை யாது? அஃது “ஓ”என்று இரையும் ஓர் ஒலியே யன்றோ? ஆகவே, எல்லா எழுத்தோசைகட்கும் முதலாய் இயல்பாகத் தோன்றி ஓவாது ஒலி செய்து கொண்டிருப்பது ஓவென்னும் ஒலியே யல்லாமல் வேறொன் றன்றென்பது நினைவிற் பதிக்கற்பாற்று. இவ்வியற்கை முதலோசை வடமொழியிற் ‘ப்ரணவம்’ என்று வழங்கப்படுகின்றது; 'ப்ரண' என்னும் முதல் ‘பழைய' என்னும் பொருளைத் தருவதாகும்; எனவே, வடநூலாரும் ‘ஓ’ என்னும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/229&oldid=1592963" இலிருந்து மீள்விக்கப்பட்டது