உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

246

மறைமலையம் - 31

அதன்பின், அம்பலவாணர் அம்மை அல்லது முரு கப்பிரான் வள்ளி தெய்வயானை திருவுருவமும், யானை முகப் பிள்ளையார் திருவுருவமுங் கிழக்குநோக்க நிறுத்தி, அவற்றின் எதிரே ஒத்த நீளமுள்ள மூன்று கோடுகளின் முனைகளும் ஒன்றையொன்று தொடுமாறு முக்கோண வரையொன்று நிலத்தே வரைந்து கொள்க. பின்னர் அம்முக்கோணக் கோடுகளின் மையத்தைச் சிறிது தொடுமாறு ஒரு வட்ட வடிவை அம் முக்கோணத்தினுள்ளே வரைக. பின்னர்

கே

அவ்வட்டத்தினுள்ளே வில்வடிவான வரை ஒன்றும் அமைத்திடுக. பிறகு அம்முக்கோண வட்டத்தின் மேல் தூய ஆற்றுமணலையும், அவ்வாற்று மணன்மேற் பச்சரிசி உமியையும் பரப்புக. அவ்வுமிமேல் அத்தி இத்தி ஆல் அரசு மா களா பல П என்னும் பால்மரங்கள் எல்லாவற்றின் சுள்ளிகளையேனும் அல்லாதவற்றிற் கிடைப்பனவற்றின் சுள்ளிகளையேனும் அடுக்கி வைக்க. ஒரு கிண்ணத்தில் நெய்யும், அந்நெய்யை முகந்தெடுக்கும் ஒரு கரண்டியுங், கற்பூரம், நெற்பொரி, பூ, பழம், சந்தனம், மணத்தூள், மஞ்சள், குங்குமம், பச்சரிசி, திருநீறு முதலியனவும் அம்முக்கோணத்தின் அரு வைத்துக் கொள்க. இன்னும் அம்முக்கோணத்தின் அருகே நூல் சுற்றிய நிறைநீர்க் குடம் இரண்டு, வாழையிலை மேற் பரப்பப்பட்ட பச்சரிசி மேற் கிழக்குநோக்க நிறுத்தி, அக் குடங்களின் உள்ளே அவரவர் தகுதிக்குத் தகப் பொன்னும் மணியும் பெய்து, அவையிற்றின் வாயில் ஐந்திலையுள்ள மாங்கொத்து ஒவ்வொன்றைச் செருகி, அம்மாங்கொத்து களின்மேல் மஞ்சள் திருநீறு குங்குமம் சந்தனம் இடப்பட்ட இரண்டு முழுத் தேங்காயைக் குடுமி மேல்நோக்கும் நிலையில் வைத்திடுக. நிறைநீர்க் குடங்களின் இரு பக்கங்களிலுந் தூண்டா அகல்விளக்குப் பெரியவாய் இரண்டு அமைத்திடுக.

6

அதன்பின், திருவுருவங்களின் பக்கத்தே அல்லது எதிரே வேள்வி வேட்கும் ஆசிரியன் தெற்கு அல்லது வடக்கு நோக்கிய முகமாய் அம்முக்கோணத்தின் அருகே ஒரு மணைமேல் அமர்ந்திருத்தற்கும், மணமக்கள் இருவரும் வேள்வி ஆசிரியனுக்கு வலதுகைப் புறத்தே அமர்ந்திருத் தற்கும் இட ங்காணும்படி, ஒர் ஓங்காரவரை அம்முக்கோ ணத்தையும் வேள்வியாசிரியன் இருக்கை மணமக்களின் இருக்கை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/271&oldid=1593005" இலிருந்து மீள்விக்கப்பட்டது