உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* தமிழர் மதம்

247

நிறைநீர்க்குடம் அகல்விளக்கு முதலியவற்றின் இருக்கைகள் எல்லாவற்றையும் உள்ளடக்கி நிற்பதாக நுழைவாயில் விட்டுப் பச்சரிசி மாவால் வரைந்து கொள்க.

அதன்பின், வேள்வியாசிரியன் நுழைவாயில் வழியே ஓங்கார வரையின் உட்புகுந்து முக்கோணத்தின் அருகே தன்னிருக்கைமேல் அமர்ந்து, நீராடிப் புதிது உடுத்த மணமகன் மணமகளை வருவித்து வாயில் வழியே ஓங்கார வரையினுட் புகச்செய்து அமர்விக்க.

அதன்பின், “பிடியதனுரு உமைகொள” என்னுந் தேவாரச் செய்யுளை ஓதிக்கொண்டே யானைமுகப்பிள்ளை யார்க்கும் முருகப்பிரான் அம்பலவாணர் அம்மை முதலான இறைவன் இறைவி திருவுருவங்கட்கும் பால், தயிர், நெய், இளநீர், தேன், தண்ணீர் முதலியவற்றால் திருமுழுக்குச் செய்து, மணப்புகை காட்டித் திருநீறு சந்தனங், குங்குமம் அட்டி, நறுமணப் பூமாலை அணிந்து ஒளிகாட்டி, வழிபாடு செய்க; இங்ஙனம் வழிபாடு செய்கையில் ஓத வேண்டிய தேவார மந்திரச் செய்யுட்கள் அறிஞர் ஒருவராற் சிவபூசைத் திரட்டு என்னும் பெயரால் முன்னமே வெளிப்படுத்தப் பட்டிருக்கின்றன. அந்நூலிற் குறிப்பிட்ட வண்ணங் கடவுள் வழிபாட்டை விரிவாகச் செய்ய விரும்புவோர் அவ்வாறே செய்யலாம். அவ்வாறின்றித் தத்தமக்கேற்றபடி செய்ய வேண்டுபவர்கள் அன்பு ன் அவ்வாறுஞ் செய்யலாம். கடைசியில் மலர்தூவி வழிபாடு செய்யுங்கால், “நமச்சிவாய வாழ்க நாதன்றாள் வாழ்க” என்னுந் திருவாசக மந்திரச் செய்யுளை ஓதித் திருவுருவ வழிபாட்டை முடித்துக் கொள்க.

அதன்பிற், "கற்றாங் கெரியோம்பிக் கலியை வாராமே” என்னுந் தேவாரத் தில்லைச்சிற்றம்பலத் திருப்பதிக மந்திரச் செய்யுட்கள் எல்லாவற்றையுமாதல், அல்லது முதற் செய்யுளுங் கடைச்செய்யுளுமட்டுமாதல் ஓதிக் கொண்டே கற்பூரத்தைக் காளுத்தி முக்கோணத்தின் மேல் அடுக்கிய சுள்ளிவிறகில் இட்டு, அவை எரியத் தொடங்கியபின், திருவாசகம் 'போற்றித் திருவகவலின்' இடையில் “தாயே யாகி வளர்த்தனை போற்றி” எனத் துவங்கும் மந்திரத்திலிருந்து “போற்றி போற்றி சயசய போற்றி" எனமுடியும் மந்திரம் ஈறாகவுள்ள எல்லா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/272&oldid=1593006" இலிருந்து மீள்விக்கப்பட்டது